Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.. காட்டில் குழந்தை பெற்ற பெண்.. தாயும், சேயும் நலம்!

Woman Delivers Baby in Kerala Forest | மூணாறை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஏலக்காய் பறிக்க காட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வருவதற்கு முன்பே அவர் குழந்தை பெற்றுள்ளார்.

திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.. காட்டில் குழந்தை பெற்ற பெண்.. தாயும், சேயும் நலம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Sep 2025 08:23 AM IST

மூணாறு, செப்டம்பர் 13 : கேரளாவில் (Kerala) பெண் ஒருவருக்கு திடீரென பிரச வலி ஏற்பட்ட நிலையில், அவர் காட்டிலேயே தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த பெண் தனது கணவருடன் ஏலக்காய் பறிக்க காட்டுக்கு சென்ற நிலையில், பிரச வலி ஏற்பட்டு அங்கே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தையையும், பெண்ணையும் மீட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காட்டில் குழந்தை பெற்றெடுத்த பெண்

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள வண்டிப்பெரியாறு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பிந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பிந்து மூன்றாவதாக கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 12, 2025) கணவன், மனைவி இருவரும் வண்டிப்பெரியாறு வல்லக்கடவு வனப்பகுதிக்கு ஏலக்காய் பறிக்க சென்றுள்ளனர்.

இதையும் படிக்கவும் : 77 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மூதாட்டி.. 1,200-க்கு 829 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!

ஏலக்காய் பறிக்கும்போது ஏற்பட்ட பிரச வலி

அவர்கள் ஏலக்காய் பரித்துக்கொண்டு இருந்த பகுதி, வனப்பகுதி என்பதால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சுரேஷ் தனது மனைவி பிரச வலியால் துடிப்பதை குமுளி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் வருவதற்கு தாமதமாகியுள்ளது. இதற்கிடையே பிந்துவுக்கு பிரசவ வலி அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. இந்த நிலையில், வனப்பகுதியிலே பிந்து தனது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதையும் படிங்க : காதல் தோல்வியால் விபரீத முடிவு எடுத்த மாணவி.. கடவுள் போல காப்பாற்றிய மெட்டா.. சுவாரஸ்ய சம்பவம்!

தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் பிந்து மற்றும் அவரது குழந்தையை மீட்டு வண்டிப்பெரியாறு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவருமே நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசவ வலி ஏற்பட்ட பெண், வனப்பகுதியிலே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.