காதல் தோல்வியால் விபரீத முடிவு எடுத்த மாணவி.. கடவுள் போல காப்பாற்றிய மெட்டா.. சுவாரஸ்ய சம்பவம்!
Meta's Alert Saves College Student | உத்தர பிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலன் தன் உடனான தொடர்பை துண்டித்த நிலையில், தற்கொலைக்கு முயன்றுள்ளார். மெட்டாவின் அலர்ட் காரணமாக அந்த மாணவி மீட்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.

லக்னோ, செப்டம்பர் 04 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற கல்லூரி மாணவி மெட்டா (Meta) நிறுவனத்தின் அலர்ட்டால் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக மாணவி தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக இன்ஸ்டாகிராமில் (Instagram) பதிவிட்ட நிலையில், மெட்டா அது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார், மாணவியை காப்பாற்றியுள்ளனர். இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மெட்டாவின் அலர்ட்டால் உயிர் பிழைத்த கல்லூரி மாணவி
உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி. இவர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தும் நிலையில், அதில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையிலான காதல் சிறப்பாக சென்றுக்கொண்டு இருந்த நிலையில், அந்த இளைஞர் திடீரென மாணவி உடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்கு முன்னதாக தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : மூன்று மனைவிகளை கைவிட்ட நபர்.. 4வது காதலியை உயிருடன் எரித்த கொடூரம்.. பகீர் சம்பவம்!




மாணவியின் தற்கொலை குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அனுப்பிய மெட்டா
மாணவியின் இந்த தற்கொலை பதிவு குறித்து அவரது வீட்டிற்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு மெட்டா தகவல் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் மாணவியின் வீட்டிற்கு வெறும் 16 நிமிடங்களில் விரைந்த போலீசார் பூச்சு மருந்து குடித்து, மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மாணவியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தற்போது மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது.
தற்கொலைகளை தடுக்க உபி காவல்துறை முன்னெடுப்பு
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் தற்கொலை தொடர்பான பதிவு செய்யப்பட்டால் அது குறித்து அலர்ட்டை பெறுவதற்காக மெட்டா நிறுவனத்துடன் உத்தர பிரதேச காவல்துறை ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பின் காரணமாக 2023 ஜனவரி மாதம் முதல் அங்கு 1,315 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எண்ணம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
தற்கொலை எண்ணங்கள் வந்தால், நீங்கள் தனியாக இல்லை. மன அழுத்தம், நெருக்கடியான சூழ்நிலை, தவிர்க்க முடியாத அனுபவங்கள் போன்றவை யாரையும் தற்கொலை எண்ணத்துக்கு இட்டுச் செல்லலாம். ஆனால், இதற்கான தீர்வுகள் இருக்கின்றன. தயங்காமல் உதவியை தேடுங்கள்.
மனநல ஹெல்ப்லைன் எண்கள்
தன்னம்பிக்கை – 104 (தமிழ்நாடு அரசின் மனநலம் ஆலோசனை சேவை)
Sneha Foundation – 044 2464 0050 / 044 2464 0060 (24 மணி நேரம், தமிழிலும் செயல்படுகிறது)
iCall (TISS) – +91 9152987821 (WhatsApp வழியாகவும் கிடைக்கும்)