Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாட்ஸ்அப்பில் இரங்கல் செய்தி.. அடுத்த நாள் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Husband Killed Wife in Mumbai | மும்பையில் திருமணமான நாள் முதலே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கழுத்தில் சரமாரியாக குத்தி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ்அப்பில் இரங்கல் செய்தி.. அடுத்த நாள் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Aug 2025 08:30 AM

மும்பை, ஆகஸ்ட் 31 : மும்பையில் (Mumbai) மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் அவரை சரமாரியாக கழுத்தில் குத்தி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கொலை செய்வதற்கு முன்னதாகவே அந்தன் நபர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மனைவிக்கு இறங்கலையும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்திய நிலையில், அது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் – கழுத்தில் குத்தி கொலை செய்த கணவன்

மராட்டிய மாநிலம் பர்பானி பகுதியை சேர்ந்தவர் விஜய் ரத்தோட். இவருக்கும் வித்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், திருமணமான நாள் முதலே ரத்தோட்டுக்கு வித்யாவின் நடத்தை மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தகராறில் வாக்குவாதம் முற்றிய நிலையில், வித்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரத்தோட் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பகலில் யூடியூபில் போதனை வீடியோ.. இரவில் பலே திருடன்.. வசமாக சிக்கிய மோடிவேஷனல் ஸ்பீக்கர் !

சமாதானம் செய்ய சென்று கொலை செய்த கணவர்

விஜய் ரத்தோட்டின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை கண்டு வித்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், ரத்தோட் மனைவியை சமாதானம் செய்வதற்காக மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மனைவியை சமாதானம் செய்ய முனறுள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரத்தோட் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதையும் படிங்க : விவாகரத்து வழக்கில் விசாரணைக்கு வந்த இளம் பெண்.. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நீதிபதி.. அதிர்ச்சி சம்பவம்!

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இறந்த வித்யா

ரத்தோட் 12 முறை கத்தியால் குத்தியதால் வித்யாவின் கழுத்து, கை, மார்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லு வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் ரத்தோட் மற்றும் அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.