Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பகலில் யூடியூபில் போதனை வீடியோ.. இரவில் பலே திருடன்.. வசமாக சிக்கிய மோடிவேஷனல் ஸ்பீக்கர் !

Motivational Speaker Arrested for Robbery | ஒடிசாவை சேர்ந்த மோடிவேஷனல் ஸ்பீக்கர் ஒருவர் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கை குறித்த தத்துவங்களை அவர் வீடியோவாக பதிவிட்டு வந்த நிலையில், அவரை போலீசார் பலநாள் திருடன் என்று கூறியுள்ளனர்.

பகலில் யூடியூபில் போதனை வீடியோ.. இரவில் பலே திருடன்.. வசமாக சிக்கிய  மோடிவேஷனல் ஸ்பீக்கர் !
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2025 14:00 PM

புவனேஷ்வர், ஆகஸ்ட் 29 : ஒடிசாவில் (Odisha) யூடியூபில் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்  (Motivational Speaker) ஆக வீடியோ பதிவிட்டு வந்த நபர்  கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது யூடியூப் பக்கத்தில் குற்ற செயல்களில் இருந்து எவ்வாறு நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். இந்த நிலையில், அவரே கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டுள்ளது அவரை பின்தொடரும் நபர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், Motivational Speaker வேஷம் போட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீடு புகுந்து திருடிய யூடியூப் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்

ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் சிங். இவர் ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் ஆவார். தனது யூடியூப் சேனலில் பல மோட்டிவேஷனல் பதிவுகளை அவர் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், அவர் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெரிவித்துள்ள போலீசார், கந்தகிரி பகுதியில் உள்ள புதுமன தம்பதியின் வீட்டை உடைத்து 200 கிராம் தங்கம், ரூ.1 லட்சம் பணம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 12 பேர் பலி.. மும்பையில் அதிர்ச்சி!

10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன

இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், போலீசார் சில முக்கிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனோஜ் குமார் சிங் புதியதாக திருடியவர் இல்லை என்றும் அவர் கைதேர்ந்த திருடர் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். காரணம் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. திருடுவதை தவிர அவர் கிடைக்கும் நேரத்தில் யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். சிங் முழுநேரம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், பெயிலில் வெளியே வந்த அவர் இந்த கொள்ளை சம்பத்தை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் கனமழை … நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழப்பு

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கொடுத்த புகாரில் இந்த கொள்ளை சம்பவம் ஆகஸ்ட் 14, 2025 அன்று நடைபெற்றதாக கூறியுள்ளார். தனது கணவர் மதியம் 2.30 மணிக்கு வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டில் இருந்த சுமார் 300 கிராம் தங்கம் மற்றும் ரூ.5 லட்சம் பணம் காணாமல் போயுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.