யூடியூபில் குழந்தைகளைக் கண்டறியும் ஏஐ தொழில்நுட்பம் – எப்படி செயல்படும்?
YouTube Uses AI to Detect Minors: குழந்தைகள் வீடியோக்கள் பார்ப்பதைக் கண்டறிய யூடியூப் நிறுவனம் புதிய ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் குழந்தைகள் பார்க்கும் வீடியோக்கள் அடிப்படையில் அவர்கள் வயதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப வீடியோக்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.

பிரபல வீடியோ தளமான யூடியூப் (Youtube), குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற கண்டென்ட்களை வழங்கி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கென பிரத்யேகமாக யூடியூப் கிட்ஸ் என்ற தளம் செயல்படுகிறது. குழந்தைகள் இதனை பயன்படுத்தி கண்டென்ட்கள் பதிவேற்றலாம், மற்றும் தங்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்படும் வீடியோக்களை கண்டு மகிழலாம். இந்த யூடியூப் கிட்ஸ் தளம் மற்றும் ஆப்பை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தலாம். மேலும் சில நாடுகளில் இந்த தளத்தை வயது வரம்பு 13 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில குழந்தைகள் பெரியவர்களின் யூடியூபை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தவிர்க்க யூடியூப் ஏஐ (AI) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெரியவர்களுக்கான யூடியூப் பார்ப்பதை கண்டறிந்தால் அதனை தடுக்க நடவடிக்கையில் இறங்கும்.
குழந்தைகளை கண்டறியும் ஏஐ தொழில்நுட்பம்
இது தொடர்பாக யூடியூப் தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் ஜேம்ஸ் பெசர் தெரிவித்ததாவது, பயனர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோக்களன் வகைகள், கணக்கின் செயல்பாட்டு காலம் உள்ளிட்ட பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் வயதை மிஷின் லேர்னிங் முறையில் கணக்கிடுவதாக தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் கணக்கில் உள்ளவர்களின் பிறந்த தேதியை பொருட்படுத்தாமல், அவர்கள் பார்க்கும் வீடியோக்களை வைத்து அவர்களின் மதிப்பை கணக்கிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ஜிபிடி-5 மாடலை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ – அப்படி என்ன ஸ்பெஷல்?




யூடியூப் ஏற்கனவே சில நாடுகளில் இதனை பயன்படுத்தி நல்ல பலன் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் யூடியூபை பயன்படுத்துவது தெரியவந்தால், அதைப் பற்றி அறிவிப்பு வழங்கி, செல்ஃபி, கிரெடிட் கார்டு போன்ற தகவல்களின் மூலம் அவர்களின் வயதை சரிபார்கும் விருப்பத்தை வழங்கும். சமூக வலைதளங்கள் குழந்தைகளை கருத்தில் கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் யூடியூப் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதையும் படிக்க : உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கும் இன்ஸ்டாகிராமின் புதிய மேப் வசதி – எப்படி தவிர்ப்பது?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு யூடியூப் பயன்படுத்த தடை
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் யூடியூப் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் சமூக வலைதள சட்டங்களை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை, 2025 அன்று அந்த நாட்டின் தகவல்தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ், ஆஸ்திரேலியாவில் குழந்தைகளின் 40 சதவிகிதம் பேர், அவர்கள் வயதுக்கு மீறிய கண்டென்ட்களை பார்த்ததாக குறிப்பிட்டார். இந்தத் தகவல் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 16 வயதுக்குறைவானவர்களை பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்யும் சட்டங்களையும் விரைவில் அமல்படுத்தவுள்ளதாகவும் அறிவித்தது. இந்த சட்டங்கள் அந்நாட்டில் டிசம்பர் 10, 2025 அன்று முதல் அமலுக்கு வரும். ஆஸ்திரேலியாவை சட்டத்தை கவனித்து பல்வேறு நாடுகளும் இது போன்ற சட்டங்களை அமல்படுத்தலாமா என பரிசீலித்து வருகின்றன.