செயற்கை நுண்ணறிவால் இந்த 10 வேலைகளை செய்ய முடியாது.. மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட பட்டியல்!
Artificial Intelligence Safe Jobs | செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் காரணமாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் பறிக்க முடியாத 10 வேலைகள் குறித்த பட்டியலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் காரணமாக லட்சக்கணகான ஊழியர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. இது ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் பறிக்க முடியாத 10 வேலைகள் குறித்த பட்டியலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் என்ன என்ன துறைகள், எந்த எந்த வேலைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏஐ செய்ய முடியாத 10 வேலைகள் – பட்டியல் இதோ!
ரத்த பரிசோதனை நிபுணர்
மக்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று முறையாக பராமரித்து ஆய்வு மேற்கொள்வது இவர்களின் வேலை ஆகும். இது மனிதர்களுடன் நேரடியாக தொடர்ப்புக்கொண்டு செய்யகூடிய மிக முக்கிய வேலை என்பதால் இதனை மனிதர்களால் தான் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
செவிலியர்
மருத்துவ துறையில் மிக முக்கியமான பணி என்றால் அது செவிலியர் துறை தான். நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருந்து மாத்திரைகள் வழங்குவது, அவர்களை முறையாக கவனித்துக்கொள்வது உள்ளிட்ட செயல்களை செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியாது என கூறப்படுகிறது.




இதையும் படிங்க : ஜிபிடி-5 மாடலை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ – அப்படி என்ன ஸ்பெஷல்?
கப்பல் பொறியாளர்கள்
உலக அளவில் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளை ஒன்றாக உள்ளது கப்பல் போக்குவரத்து. சரக்குகளை ஏற்றி செல்வதற்கு இது பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சீராக நடைபெற கப்பல் பொரியாளர்களின் தேவை அதிகமாக உள்ளது. இந்த வேலையை செயற்கை நுண்ணறிவால் செய்ய முடியாது என கூறப்படுகிறது.
டயர் பழுதுபார்த்தல்
வாகனங்களின் டயர்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வதில் மனிதர்கள் திறன் மிக்கவர்களாக உள்ளனர். அதற்கு அதிக அனுபவ தேவை என்பதால் செயற்கை நுண்ணறிவால் அதனை செய்ய முடியாது என கூறப்படுகிறது.
தீயணைப்பு வீர்ரகள்
தீயணைப்பு துறை மிகவும் முக்கிய துறைகளில் ஒன்றாக உள்ளது. விபத்துக்களின் போது முடிவெடுக்கும் தன்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் இந்த துறையில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சாட்ஜிபிடியிடம் உங்கள் பெர்சனல் தகவல்களை பகிர்ந்துகொள்கிறீர்களா? எச்சரிக்கும் சாம் ஆல்ட்மேன்
எலக்ட்ரீஷியன்
மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் தொடர்பான சிக்கல்களை எலக்ட்ரீஷியன்கள் சரிசெய்கின்றனர். இதன் காரணமாக இந்த துறையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த முடியாது என மைக்ரோசாஃப்ட் அறிக்கை கூறுகிறது.
தொழில்சார் சிகிச்சை உதவியாளர்
மனிதர்களோடு தொடர்புக்கொண்டு செய்ய கூடிய வேலைகளை செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் செய்ய முடியாது என கூறும் மைக்ரோசாஃப்ட், இந்த வேலையையும் பாதுகாப்பான பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.