Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்த 4 விஷயங்களை கூகுளில் தேடாதீர்கள் – சிறை தண்டனை நிச்சயம்!

Google With Caution: சிறிய சந்தேகங்களைக் கூட கூகுகளில் தெரிந்துகொள்கிறோம். குறிப்பாக பலர் உடலில் பிரச்னை என்றால் அதன் அறிகுறிகளை கூகுகளில் தேடிய பிறகு தான் மருத்துவமனைக்கே செல்கிறார்கள். இந்த கட்டுரையில் கூகுளில் தேடக் கூடாத 4 விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த 4 விஷயங்களை கூகுளில் தேடாதீர்கள் – சிறை தண்டனை நிச்சயம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Aug 2025 18:55 PM

இணையம் மனிதர்களின் வாழ்க்கையில் நுழைந்ததிலிருந்து எல்லாம் மாறிவிட்டது.  நமக்கு எதாவது ஒரு சந்தேகம் என்றால் கூட முதலில் கூகுகளைத் தான் கேட்கிறோம். குறிப்பாக உடலில் எதாவது பிரச்னையென்றால் கூட கூகுளைக் கேட்ட பிறகே, மருத்துவரிடம் செல்கிறோம்.  இருப்பினும், கூகுளில் தேடும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நிச்சயமாக சட்ட ரீதியான சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். கூகுளில் (Google) சில தவறான தகவல்களை தேடினால் உங்கள் ஐபி முகவரி (IP Address) கண்காணிக்கப்பட்டு உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக நீங்கள் சிறைக்கு செல்லும் நிலை கூட ஏற்படலாம்.

1.வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என தேடக்கூடாது

வெடிகுண்டு அல்லது ஆயுதங்களை தயாரிப்பதற்கான முறைகளை கூகுளில் ஒருபோதும் தேடக்கூடாது. நாட்டின் புலனாய்வு அமைப்புகள் இதுபோன்ற தேடல்களைத் தொடர்ந்து கண்காணிக்கின்றன. நீங்கள் வெடி குண்டு தயாரிக்கும் முறை குறித்து தேடினால் நீங்கள் சந்தேகத்துக்குரிய நபராக கருதப்படுவீர்கள். இது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், உள்ளூர் காவல்துறை உங்களை வீடு தேடி வந்து விசாரிக்க வாய்ப்பிருக்கிறது.  உங்களை கைது செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிக்க : இந்தியாவின் அதிகம் பயன்படுத்தும் 8 முக்கிய அரசு செயலிகள் – இந்த லிஸ்ட்டில் உங்க ஆப் இருக்கா?

2. ஹேக் செய்வது எப்படி என தேடாதீர்கள்

இன்ஸ்டாகிராம் ஐடியை எப்படி ஹேக் செய்வது, பாஸ்வேர்டு எப்படி ஹேக் செய்வது அல்லது ஹேக்கிங் கருவிகளை எப்படி டவுன்லோடு செய்வது என்று கூகுளில் தேடாதீர்கள். ஹேக்கிங் என்பது சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். எனவே காவல்துறை உங்களை சந்தேகத்துக்குரிய நபராக கருதி விசாரிக்கலாம். ஹேக்கிங் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால் கைது செய்யப்படுவீர்கள்.

பைரசி படங்களை தேடாதீர்கள்

இப்போது மக்கள் ஓடிடி அல்லது திரையரங்குகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, மக்கள் கூகுளில் இலவசமாக திரைப்படங்களைத் தேடுகிறார்கள். ஆனால் அது சட்டப்படி குற்றமாகும். கூகுளில் பைரசி திரைப்படத்தை பதிவிறக்கம் செய்தாலோ அல்லது தேடினாலோ, அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம். இந்தியாவில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இது குற்றமாக கருதப்படும்.

இதையும் படிக்க : கூகுள் போட்டோஸில் இனி இவை எல்லாம் தெரிந்துக்கொள்ளலாம்.. என்ன என்ன தெரியுமா?

4. குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுள் செய்ய வேண்டாம்

கூகுளில் குழந்தைகளின் ஆபாச உள்ளடக்கத்தைத் தேடினால், நீங்கள் குற்றவாளியாக கருதப்படுவீர்கள். இது உலகளவில் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. நீங்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை கூகுளில் தேடினால், உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. போஸ்கோ சட்டத்தின் கீழ், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படலாம். இதனால் உங்களை கைது செய்யவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இனி கூகுகளில் தகவல்களைத் தேடும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.