AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேஜ கூட்டணியில் விஜய்க்கு முதல்வர் பதவி? முக்கிய புள்ளிகள் மூலம் தூது.. ஆஃபரை ஏற்பாரா.. எதிர்பாரா!

Tvk Leader Vijay: தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அவருக்கு இந்த கூட்டணியில் முதல்வர் பதவி வழங்க இருப்பதாகவும், அதற்கு எடப்பாடி கே. பழனிசாமி சற்று தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

தேஜ கூட்டணியில் விஜய்க்கு முதல்வர் பதவி? முக்கிய புள்ளிகள் மூலம் தூது.. ஆஃபரை ஏற்பாரா.. எதிர்பாரா!
தேஜ கூட்டணியில் விஜய்க்கு முதல்வர் பதவி?
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 10 Mar 2026 11:11 AM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவே தெரிகிறது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை திமுக அமைத்துள்ளது. இதே போல, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு), அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. இது திமுக கூட்டணியை எதிர்க்க போதாது என அதிமுக மற்றும் பாஜக தலைமை எண்ணுவதாக கூறப்படுகிறது. இதற்காக அதிமுக கூட்டணியின் பலத்தை கூட்டுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணி இணைக்க இலக்கு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜயை தேஜ கூட்டணியில் இணைக்க முயற்சி

இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுதியாக தமிழக வெற்றிக் கழகத்தை இணைக்க வேண்டும் எனவும், அப்படி இணைக்கும் பட்சத்தில் தான் திமுக கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற முடியும் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி உருவானது முதல் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மூலம் விஜயுடன் தேஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது தொடர்பாக ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் படிக்க: சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு வேண்டும்.. தவெக தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை..

தயக்கம் காட்டும் எடப்பாடி பழனிசாமி

திமுகவுக்கு எதிரான சக்திகளை ஒன்றாக திரட்ட வேண்டும் என்று ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழக வெற்றி கழகத்தை இணைப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்று தயங்குவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் அங்கம் வகித்தால் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் சிக்கல் ஏற்படும் என்று கருதுவதாக தெரிகிறது. இதற்கு பாஜகவும் சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் விஜய்க்கு முதல்வர் பதவி

இதில், 2.5 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், மீதமுள்ள 2.5 ஆண்டுகள் விஜய் முதல்வராகவும் இருக்கலாம் என யோசனை வழங்கியதாகவும் தெரிகிறது. இல்லையெனில், எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், விஜய் துணை முதல்வர் ஆகவும் நியமிக்க படலாம் என்றும் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைப்பதற்காகவே தற்போது வரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ… அதிமுக கூட்டணியை விஜய் ஏற்பாரா அல்லது எதிர்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க: 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.. உழைக்க நான் தயார்.. நீங்கள் தயாரா? முதல்வர் ஸ்டாலின்..

Follow Us