AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு வேண்டும்.. தவெக தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை..

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தாவேக்கா நிர்வாகிகளான என். ஆனந்தன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் சிபிஐ முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு வேண்டும்.. தவெக தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Mar 2026 18:05 PM IST

சென்னை, மார்ச் 9, 2026: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு டெல்லி சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து, சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு 2025ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

கரூர் கூட்ட நெரிசல்:

திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: ஒரே நாடு, ஒரே தேர்தல்.. நோயை விட கொடிய மருந்து – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..

இதனைத் தொடர்ந்து அந்த மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் காஞ்சிபுரம், வேலூர், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை விட நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி, விஜய் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

சிபிஐ விசாரணை:

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தாவேக்கா நிர்வாகிகளான என். ஆனந்தன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் சிபிஐ முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க: மாநிலங்களவை தேர்தல்.. தமிழகத்தில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு..

விசாரணையில் இருந்து விலக்கு வேண்டும் – விஜய்:

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக 2026 மார்ச் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் பணிகள் காரணமாக நாளை நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த கோரிக்கையை சிபிஐ தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

Follow Us