Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Redmi Note 14 SE : பட்ஜெட் விலையில் அறிமுகமானது ரெட்மி நோட் 14 எஸ்இ.. சிறப்பு அம்சங்கள் என்ன?

Redmi Note 14 SE Launched in India | ரெட்மி நிறுவனம் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Redmi Note 14 SE : பட்ஜெட் விலையில் அறிமுகமானது ரெட்மி நோட் 14 எஸ்இ.. சிறப்பு அம்சங்கள் என்ன?
ரெட்மி நோட் 14 எஸ்இ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jul 2025 22:13 PM

ரெட்மி (Redmi) நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன் (Redmi Note 14 SE Smartphone) தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரெட்மி அறிமுகம் செய்துள்ள பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் ஆகும். இந்த நிலையில், ரெட்மி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன்

ரெட்மி நிறுவனம் சமீப காலமாக தனது நோட் 14 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது, ரெட்மி நோட் 14 5ஜி, ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5 ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை ரெட்மி இதுவரை அறிமுகம் செய்துள்ள நிலையில், அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் தான் இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ. இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோட் 14 வகை ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : அதிக வெப்பம் ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7025, ஆக்ரோ கோர் பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் HD திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை உறுதியாக இருப்பதற்காக கொரில்லா கோடிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்பக்கம் 20 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 5110 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேக் கொண்ட இந்த ரெட்மி நோட் 14 எஸ்இ ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 7 முதல் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.