Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

Best Cameras Under 25,000 Rupees | மனிதர்கள் மத்தியில் ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அவற்றின் விலையும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Jul 2025 14:04 PM

மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றால் பெரும்பாலான வேலைகளை செய்ய முடியாத சூழல் உள்ள நிலையில், பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் பரவலாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்கள் மனிதர்களின் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக மாறி வரும் நிலையில், அதன் விலையும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி, லாவா அக்னி 3 5ஜி, நத்திங் போன் 3ஏ 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்களாக கருதப்படுகின்றன.

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போன் கேமராவில் 50 MP மெயின் லென்ஸ், 8 MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமாக படம் பிடிக்கும் அம்சம் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4K தரத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம். 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ.21,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லாவா அக்னி 3 5ஜி

லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. அதாவது 50 MP மெயின் கேமரா, 3X Optical Zoom மற்றும் 8MP Ultrawide அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 60MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  துல்லியமாக படம் பிடிக்க உதவும் நிலையில், இது 4K தரத்தை கொடுக்கிறது. இது ரூ.20,998-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Realme Narzo 80 Lite 5G : அட்டகாசமான அம்சங்களுடன் வெறும் ரூ.10,499-க்கு அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி!

நத்திங் போன் 3ஏ 5ஜி

நத்திங் போன் 3ஏ 5ஜி (Nothing Phone 3A 5G) ஸ்மார்ட்போன் டூயல் 50 MP Rear Sensor மற்றும் 32 MP Front Lens அம்சத்தை கொண்டுள்ளது. இதுதவிர 6.77 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் 50W வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.23,009-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ

ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) ஸ்மார்ட்போனில் 200 MP மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அது தவிர OIS, EIS, டூயல் LED Flash மற்றும் 16 MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.