Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

iPhone 15 : வெறும் ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15.. அமேசான் அதிரடி!

Amazon iPhone 15 Deal | அமேசான் நிறுவனம் அவ்வப்போது ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகையின் மூலம் ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.26.000-க்கு வாங்கிக்கொள்ளலாம்.

iPhone 15 : வெறும் ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15.. அமேசான் அதிரடி!
ஆப்பிள் ஐபோன் 15
vinalin-sweety
Vinalin Sweety | Published: 22 Jun 2025 15:12 PM

ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு (Apple iPhone 15 Smartphone) அமேசான் தளத்தில் (Amazon Platform) அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.79,900 என்ற அடிப்படை விலையில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் இத்தகைய அசத்தலான தள்ளுபடியை வழங்கி வரும் நிலையில், அதனை பயன்படுத்தி வெறும் ரூ.26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.26,000-க்கு ஆப்பிள் ஐபோன் 15 வழங்கும் அமேசான்

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அவற்றின் செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றின் காரணமாக ஏராளமான பொதுமக்கள் ஆப்பிள் ஐபோன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் சற்று விலை அதிகமாக இருப்பதன் காரணமாக சிலரால் அதனை வாங்கி பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் வாங்க விரும்பும் நபர்களுக்கு வரப்பிரசாதமாக அமேசான் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

ரூ.79,900 மதிப்பிலான ஐபோன் வெறும் ரூ.26,000 தான் – அமேசான் அசத்தல்

அமேசான் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.79,900 மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.26,000-க்கு வாங்கலாம்.

14 சதவீதம் தள்ளுபடி

128 ஜிபி ஸ்ரோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபோன் இந்தியாவில் ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனுக்கு அமேசான் சிறப்பு சலுகை வழங்கி வருகிறது. அமேசானில் இதற்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.59,900-க்கு அமேசானில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

பழைய ஐபோன் எக்ஸ்சேஞ்ச்

512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பழைய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வைத்துள்ளீர்கள் என்றால் அதனை எக்ஸ்சேஞ்ச் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு எக்ஸ்சேஞ்ச் செய்யும்பொது வெறும் ரூ.29,000-க்கு ஐபோன் 15-ஐ வாங்க முடியும். இந்த நிலையில், அமேசான் ஐசிஐசிஐ கிரெடிட் கார்சை பயன்படுத்தி இந்த ச்மார்ட்போனை பாங்கினால் கூடுதலாக ரூ.2,995 தள்ளுபடி வழங்கப்படும். அதன் மூலம் வெறும் ரூ.26,005-க்கு ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.