Budget Smartphones : ஜூன் 2025-ல் ரூ.15,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்ஸ்.. லிஸ்ட் இதோ!
Best Budget Smartphones Under 15,000 Rupees | பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன்களின் விலையும் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், ஜூன் 2025-ல் ரூ.15,000-க்குள் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் (Smartphone) கட்டாயமாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் இல்லை என்றால் பல்வேறு செயல்களை செய்ய முடியாது என்ற சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி பல வேலைகளை மிக சுலபமாக செய்து முடித்துவிட முடியும். இதன் காரணமாக உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களின் விலையும் அதிகமாக உள்ள நிலையில், ரூ.15,000-க்குள் பல சிறப்பு அம்சங்களுடன் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மோட்டோ ஜி64
இந்த மோட்டோ ஜி64 (Moto G64) ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (Mediatek Dimensity 7025) பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், 50MP + 8MP டூயல் கேமரா அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி64 ஸ்மார்ட்போன் ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ ஜி54
இந்த மோட்டோ ஜி54 (Moto G54) மீடியாடெக் டைமன்சிட்டி 7020 (Mediatek Dimensity 7020) பிராசசரை கொண்டுள்ளது. 8GB RAM கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், அதிக திறன் கொண்ட 6,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP + 8MP டூயல் கேமரா அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோ ஜி54 ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ ஜி45 5ஜி
இந்த மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) பிராசசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேமிங் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். 8GB RAM வேரியண்ட் கொண்ட மோட்டோ ஜி45 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.11,839-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ ஜி35
மோட்டோ ஜி35 (Moto G35) ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் Full HD + டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 695 (Snapdragon 695) பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், MP + 8MP டூயல் கேமரா அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நாள்முழுவதும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மோட்டோ ஜி35 ஸ்மார்ட்போன் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.