Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Realme Narzo 80 Lite 5G : அட்டகாசமான அம்சங்களுடன் வெறும் ரூ.10,499-க்கு அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி!

Realme Narzo 80 Lite 5G launched in India | ரியல்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Realme Narzo 80 Lite 5G : அட்டகாசமான அம்சங்களுடன் வெறும் ரூ.10,499-க்கு அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி!
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 17 Jun 2025 15:15 PM

இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ரியல்மி (Realme) தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை (New Model Smartphones) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களை கொண்ட புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ரியல்மி தனது Narzo சீரீஸில் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி சி73 5ஜி (Realme C73 5G) ஸ்மார்ட்போனை போலவே உள்ளது. ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பர்பில் மற்றும் பிளாக் நிரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி

இந்த ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 120 Hz+HD டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில், டைமன்சிட்டி 6300 SoC அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 32 MP ரியர் கேமரா (Rear Camera) கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 8MP செல்ஃபி கேமரா (Selfie Camera) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் 6,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் மேலும் சில அம்சங்கள்

4GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்ட் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.10,499-க்கும், 6GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்ட் ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.11,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 4GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 மற்றும் 6GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.700 தள்ளுபடி வழங்கப்படுவதால் இந்த ஸ்மார்ட்போன்களை வெறும் ரூ.9,999 மற்றும் 10,999-க்கே வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் 23, 2025 முதல் அமேசானில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?...
நான் சொன்ன காரணத்திற்காக படம் பார்க்க வராதீர்கள்- சித்தார்த்
நான் சொன்ன காரணத்திற்காக படம் பார்க்க வராதீர்கள்- சித்தார்த்...
20 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் விக்ரமின் அந்நியன் படம்!
20 ஆண்டுகளை நிறைவு செய்தது நடிகர் விக்ரமின் அந்நியன் படம்!...
யூடியூப், இன்ஸ்டாகிராம் போல இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம்
யூடியூப், இன்ஸ்டாகிராம் போல இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம்...
கர்நாடகாவில் வெளுக்கும் மழை.. நிலச்சரிவு பாதிப்பு!
கர்நாடகாவில் வெளுக்கும் மழை.. நிலச்சரிவு பாதிப்பு!...
கேப்டன் பதவியை ஏன் வேண்டாம் என்றேன்..? மௌனம் கலைத்த பும்ரா!
கேப்டன் பதவியை ஏன் வேண்டாம் என்றேன்..? மௌனம் கலைத்த பும்ரா!...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்.. 3D வீடியோ பாரு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்.. 3D வீடியோ பாரு...
ஜெயிலர் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. ரசிகர்கள் உற்சாகம்!
ஜெயிலர் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்.. ரசிகர்கள் உற்சாகம்!...
பிஎஃப் பணம் எடுத்துவிட்டீர்களா? EPS பற்றி தெரியுமா?
பிஎஃப் பணம் எடுத்துவிட்டீர்களா? EPS பற்றி தெரியுமா?...
மலையாள சினிமாவில் என்னை நடிக்கத் தெரியவில்லை என கிண்டலடித்தார்கள்
மலையாள சினிமாவில் என்னை நடிக்கத் தெரியவில்லை என கிண்டலடித்தார்கள்...
கண்துடைப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கக் கூடாது - தவெக விஜய்
கண்துடைப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கக் கூடாது - தவெக விஜய்...