AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vivo T4 Ultra : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான விவோ டி4 அல்ட்ரா.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!

Vivo T4 Ultra Launched in India | விவோ நிறுவனம் தனது டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (T Series Smartphones) அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vivo T4 Ultra : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான விவோ டி4 அல்ட்ரா.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!
விவோ டி4 அல்ட்ரா
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Jun 2025 14:04 PM IST

விவோ (Vivo) நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது விவோ டி4 அல்ட்ரா (Vivo T4 Ultra) என்ற ஒரு புது மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோ நிறுவனம் அறிமுகம் செய்து வந்த விவோ டி சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் (Vivo T Series Smartphones) ஒரு அங்கமாகும். சிறப்பான தோற்றம் மற்றும் நீடித்து உழைக்கும் பேட்டரி தன்மை கொண்ட ஸ்மார்ட்போனை எதிர்ப்பார்க்கும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில், விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது விவோவின் டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன்

இந்த டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 93000+ சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 12 ஜிபி வரை LPDDR5 RAM மற்றும் 512 ஜிபி வரை UFS 3.1 ஸ்ரோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் எஸ்டி கார்டு (SD Card  – Secure Digital Card) போடும் அம்சம் இல்லை. ஆனால், அதன் RAM-ஐ அதிகரித்துக்கொள்வதற்கான அம்சம் உள்ளது. எனவே அதிக ஸ்டோரேஜ் தேவைப்படும் பயனர்களை அதன் RAM-ஐ அதிகரித்துக்கொள்ளலாம்.

அட்டகாசமான அம்சங்களுடன் வெளியானது டி4 அல்ட்ரா

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த விவோ டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 3 RAM மற்றும் ஸ்டோரேஜ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 8GB + 256 GB, 12GB + 256GB மற்றும் 12GB + 512GB என மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8GB + 256 GB கொண்ட ஸ்மார்ட்போன் 37,999-க்கு, GB, 12GB கொண்ட ஸ்மார்ட்போன் 39,999-க்கும் மற்றும் 12GB + 512GB கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.41,999-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், ஜூன் 18, 2025 முதல் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us