Samsung Galaxy F36 5G : பட்ஜெட் விலையில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஃப்36 5ஜி.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
Samsung Galaxy F36 5G Launched in India | சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஃப்36 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக சாம்சங் உள்ளது. இவ்வாறு சாம்சங் ஸ்மார்ட்போனை ஏராளமான மக்கள் பயன்படுத்தும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் தற்போது தனது மேலும் ஒரு புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, சாம்சங் கேலக்ஸி எஃப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போன் தான் தற்போது சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஃப்36 5ஜி
சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன சாம்சங் கேலக்ஸி எஃப்36 5ஜி-ஐ பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்பிளே கொடுப்பட்டுள்ள நிலையில், Exynos 1380 பிராசசர் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 500 மெகா பிக்சல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும், இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை மிகவும் எளிதாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்த முடியும்.




இதையும் படிங்க : ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஃப்36 5ஜி
Samsung Galaxy F36 5G launched in India 🇮🇳
🔹6.7″ FHD+ sAMOLED Display
🔹Exynos 1380
🔹50MP (OIS)+ 8MP UW+ 2MP
🔹13MP Front
🔹5000mAh🔋+ 25W⚡
🔹Android 15 & One UI 7
🔹6+6 Years of Software Updates
🔹7.7mm
🔹197gPrice 💰 17499₹ ~ 6+128GB #Samsung #GalaxyF36 pic.twitter.com/eJvTtx27E3
— Tech Home (@TechHome100) July 19, 2025
விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்
இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்36 5ஜி ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்36 5ஜி ஸ்மார்ட்போன் வெறும் ரூ.17,499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அதிக விலையில் அறிமுகம் செய்யப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.zல்