AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம்.. எகிறும் எதிர்பார்ப்புகள்!

Samsung S26 Series Smartphones | சாம்சங் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகம்.. எகிறும் எதிர்பார்ப்புகள்!
சாம்சங் எஸ்26 சீரீஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Feb 2026 16:16 PM IST

உலக அளவில் ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக உள்ளது சாம்சங்க் (Samsung) நிறுவனம் தான். ஐபோன்களை போலவே, சாம்சங் பயனர்களும் அதிகமாக உள்ளனர். இதன் காரணமாக அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Samsung Galaxy S26 Series Smartphones) இன்று (பிப்ரவரி 25, 2026) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் சாம்சங்

கொரியாவை தலைமை இடமாக கொண்டுள்ள சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இன்று (பிப்ரவரி 25, 2026) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சீரீஸில் மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, சாம்சங் கேலக்ஸி எஸ்26, எஸ்26 பிளஸ் மற்றும் எஸ்26 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வார்த்தைகளை ஸ்டிக்கர்களாக மாற்றலாம்.. வாட்ஸ் அப்பில் வந்த அசத்தல் அம்சம்!

இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகமாகும்?

சாம்சங் நிறுவனத்தின் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை மையப்படுத்தியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் ரூ.80,999-க்கும், சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ரூ.99,999-க்கு அறிமுகமானது. மேலும், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ரூ.1,29,999-க்கு அறிமுகமானது. இந்த நிலையில், இந்த விலை பட்டியலை மையப்படுத்தியதாக இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : உங்க வைஃபை பாஸ்வேர்டு யாருக்கும் தெரிய கூடாத.. இந்த விஷயங்களை டிரை பண்ணுங்க!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற உள்ளா விழாவில் சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்திய நேரப்படி சரியாக இரவு 11.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நேரலையை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூடியூப் தளம் வாயிலாக பார்க்கலாம்.

Follow Us