AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Smartphone : உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. அப்படியே புதுசுபோல இருக்கும்!

Smartphone Screen Cleaning Tips | தற்போதைய காலக்கட்டத்தில் நாம் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகிறோம். அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக ஸ்மார்ட்போன் உள்ள நிலையில், அதில் தூசி மற்றும் கிருமிகள் உருவாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை அடிக்கடி சுத்தம் செய்வது ஸ்கிரீனையும், உடல் நலத்தையும் பாதுகாக்க உதவும்.

Smartphone : உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை இப்படி சுத்தம் செய்யுங்கள்.. அப்படியே புதுசுபோல இருக்கும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 18 Jun 2025 17:08 PM IST

பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் ஸ்மார்ட்போனும் ஒன்று. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன்கள் மனிதர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. அருகில் இருக்கும் கடைக்கு செல்வது முதல் அலுவலகத்திற்கு செல்வது, வெளியூர்களுக்கு செல்வது வரை என அனைத்து இடங்களுக்கும் ஸ்மார்ட்போனை எடுத்து செல்கிறோம். குறுஞ்செய்தி அனுப்புவது, போன்கால் பேசுவது என எப்பொழுதும் ஸ்மார்ட்போனை பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். இதன் காரணமாக ஸ்மார்ட்போன்களின் ஸ்கிரீன்கள் மிக எளிதில் மாசடைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஸ்கிரீனுக்கு சில சிக்கல்கள் வரலாம். எனவே, ஸ்கிரீனுக்கும் ஸ்மார்ட்போனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களை நாம் நமது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் அதில் மிக எளிதாக தூசி மற்றும் கிருமிகள் சேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், மொபைல் போனின் ஸ்கிரீனை சுத்தம் செய்யாமல் அப்படியே பயன்படுத்துவதன் மூலம் மொபைல் ஸ்கிரீனின் திறன் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, உடல்நல கோளாறுகளையும் ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. எனவே, ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியமாக உள்ளது. ஆனால், சிலர் எப்படி சுத்தம் செய்வது என தெரியாமல், ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை சேதப்படுத்திவிடுகின்றனர்.

ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை பாதுகாப்பாக் சுத்தம் செய்வது எப்படி?

மைக்ரோ ஃபைபர் துணியை பயன்படுத்த வேண்டும்

ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை சுத்தம் செய்ய மைக்ரோ ஃபைபர் துணியை (Micro Fiber Cloth) பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும். மற்ற துணியை பயன்படுத்தும்போது ஸ்கிரீனில் கீரல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், மைக்ரோ ஃபைபர் துணிகள் மென்மையாக இருக்கும் என்பதால், ஸ்கிரீனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

லேசான ஈரப்பதத்தை கொண்டு சுத்தம் செய்யுங்கள்

லேசான ஈரப்பதத்துடன் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை சுத்தம் செய்யும் நிலையில், தூசி மற்றும் அழுக்குகள் சுத்தம் செய்யப்படும். இதற்கு சுத்தமான தண்ணீர் அல்லது ஸ்மார்ட்போன்களின் ஸ்கிரீன்களை துடைக்க பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் திரவங்களை வாங்கி பயன்படுத்தலாம்.

மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும்

ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை சுத்தம் செய்யும்போது சர்க்குலர் மோஷனில் (Circular Motion) சுத்தம் செய்ய வேண்டும். கைகள் எங்கெல்லாம் அதிகம் படுமோ அந்த இடங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும்போது மென்மையாக செய்ய வேண்டும். அதிகம் அழுத்தம் கொடுத்து சுத்தம் செய்தால் ஸ்கிரீன் உடைந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது.

Follow Us