இரவு முழுக்க போனை சார்ஜில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
Smartphone Battery Warning: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றியமையாதது. நாள் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டியிருப்பதால் அனைவரும் இரவிலேயே போனை சார்ஜ் போடுகிறார்கள். ஆனால் அப்படி செய்வதால் போனுக்கு ஆபத்து என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கட்டுரையில் இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. போன் கால், மெசேஜ்கள், பேமெண்ட், வேலை, வீடியோ, சமூக ஊடகங்கள் (Social Media) என ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒருவேலையும் நடக்காது. அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அப்படிப்பட்ட ஸ்மார்ட்போன்களை நாம் முறையாக பராமரிப்பது அவசியம். குறிப்பாக சார்ஜ் போடுவதில் நாம் நிறைய தவறுகளை செய்கிறோம். பலரும் போனை நாள் முழுவதும் பயன்படுத்துவதால், இரவில் மட்டுமே சார்ஜ் போட்டு காலையில் தான் எடுக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த கட்டுரையில் போனை இரவு முழுவதும் சார்ஜ் போடுவதால் ஏற்படும் மாற்றம் குறித்து பார்க்கலாம்.
போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாமா?
பலர் நாள் முழுவதும் போனை பயன்படுத்துவதால் இரவில் தான் சார்ஜ் போடுகிறார்கள். இது உலகம் முழுக்க பொதுவான பழக்கமாக இருந்து வருகிறது. போனை இரவு முழுவதும் சார்ஜில் வைத்திருப்பது போனின் பேட்டரி ஆயுள் மற்றும் செயல்திறனை பாதிக்கும் என எச்சரிக்கிறார்கள். இதனால் நமது போனின் பேட்டரி பாதிப்புக்குள்ளாகி சில மணி நேர பயன்பாட்டுக்கு பிறகு சார்ஜ் விரைவில் குறையும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
இன்றைய ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்கள் லித்தியம்-அயன் பேட்டரிகளை பயன்படுத்துகின்றன. இவை நவீன தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டாலும், சில பிரச்னைகளை ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. குறிப்பாக போனின் சார்ஜ் முழுவதும் காலியான பிறகே சார்ஜ் போடுகிறார்கள். அதே போல பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் சார்ஜரில் இருந்து நீக்காமல் இருப்பதும் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.




இதையும் படிங்க: உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி ஸ்டோரேஜ் சிக்கலை சந்திக்கிறீர்களா?.. அப்போ இத பண்ணுங்க!
போனை ஓவர்சார்ஜ் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்
சார்ஜ் 100% ஆன பிறகும் போனை அதிக நேரம் சார்ஜில் வைப்பது, அதனை அதிக சூடாக்கும். இது பேட்டரியின் உள்ளமைவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சில சந்தர்ப்பங்களில் போன் வெடிக்கவோ அல்லது தீபிடிக்கும் அபாயத்தையோ ஏற்படுத்தும். போன் வெடித்து சிலர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து செய்திகளில் படித்திருப்போம்.
சரியான முறையில் சார்ஜ் செய்வது எப்படி?
-
போனின் முழுமையாக 0% ஆகும் முன் சார்ஜ் செய்யுங்கள்.
-
100% ஆனதும் சார்ஜரில் இருந்து போனை நீக்கவும்.
-
மேலும் போனை சார்ஜ் செய்தபடி பயன்படுத்த வேண்டாம். இது வெப்பத்தை அதிகரிக்கும்.
-
இரவு முழுக்க சார்ஜ் செய்யும் பழக்கத்தை தவிருங்கள்.
இதையும் படிங்க: சார்ஜ் போட்டபடி வேலை செய்தால், லேப்டாப் பேட்டரி பாதிக்கப்படுமா? உண்மை என்ன?
ஆட்டோ-கட் ஆஃப் இருக்கும்போதும் கவனம் தேவை
இன்றைய ஸ்மார்ட்போன்களில் பேட்டரியை பாதுகாக்க பேட்டரி புரொடக்சன் சிஸ்டம்ஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வசதி பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன் தானாக சார்ஜிங் நிறுத்தும். ஆனால் இது 100 சதவிகிதம் நம்பகமானதாக இருக்காது. எனவே போன் சார்ஜ் ஆனதும் அதனை சார்ஜரில் இருந்து நீக்குவது சிறந்தது.