AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சார்ஜ் செய்யும்போது இந்த தவறை செய்யாதீர்கள் – உங்கள் போன் வெடிக்கலாம்!

Smartphone Safety Alert : ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறியிருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இன்றைய காலகட்டத்தில் உலகோடு தொடர்பில் இருக்க  போன் மிகவும் அவசியம். போனை சார்ஜ் செய்யும்போது செய்யும் சில சிறிய தவறுகள் பெரிய விபத்துகளை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் போனை சார்ஜ் செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

சார்ஜ் செய்யும்போது இந்த தவறை செய்யாதீர்கள் – உங்கள் போன் வெடிக்கலாம்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jun 2025 19:30 PM IST

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் (Smartphone) நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது.  அதை இரவும் பகலும் பயன்படுத்துகிறோம். வேலை சார்ந்து போன் பேசுவதாக இருந்தாலும் சரி, கேம் விளையாடுவது, சமூக ஊடகங்களைப் (Social Media) பயன்படுத்துவது என அதன் பயன்பாடு இன்றிமையாததாக இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இன்றைய காலகட்டத்தில் உலகோடு தொடர்பில் இருக்க  போன் மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட் போன்களில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. எனவே அதனை சரியாக கையாளவிட்டால் ஆபத்தில் சிக்க நேரிடும்.  குறிப்பாக போனை சார்ஜ் செய்யும்போது செய்யும் சில சிறிய தவறுகள் பெரிய விபத்துகளை ஏற்படுத்தும். இந்த கட்டுரையில் போனை சார்ஜ் செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும், சார்ஜ் செய்யும்போது தொலைபேசிகள் வெடித்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், நமது தொலைபேசி வெடிக்காமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

சார்ஜ் செய்யும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்

  • போலியான அல்லது விலைகுறைந்த சார்ஜரைப் பயன்படுத்த வேண்டாம்.  மேலும் இது உங்கள் செலவுகளைக் குறைத்தாலும் பாதிப்பை அதிகரிக்கும். லோக்கல் பிராண்டுகளின் சார்ஜர்களில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்காது. இதன் காரணமாக அதிக வெப்பம் மற்றும் ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எப்போதும் ஒரிஜினல் அல்லது பிராண்டட் சார்ஜரைப் பயன்படுத்துங்கள்.
  • சார்ஜ் போடும்போது போனை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் தொடர்ந்து வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், கேம் விளையாடிக் கொண்டிருந்தால் அல்லது சார்ஜ் செய்த படி போன் பேசுவதால்  போன் விரைவாக வெப்பமடையக்கூடும். இது பேட்டரி வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, சார்ஜ் செய்யும் போது போன் பயன்பாட்டைக் குறைக்கவும்.
  • தலையணை அல்லது படுக்கையில் வைத்து தொலைபேசியை சார்ஜ் செய்வது ஈஸியானதாக இருக்கலாம். ஆனால் அதில் ஆபத்துகள் அதிகம்.  பலர் தங்கள் போனை சார்ஜரில் வைத்து தலையணைக்கு அடியிலோ அல்லது மெத்தையிலோ வைத்திருப்பார்கள், இதனால் வெப்பம் வெளியேற முடியாமல் போன் அதிக வெப்பமடையும். சார்ஜ் செய்யும்போது போனை குளிர்ந்த மற்றும் திறந்த இடத்தில் வைக்கவும்.
  • இரவு முழுவதும் போனை சார்ஜில் வைப்பது சிறிது நேரத்திற்குப் பிறகு சிக்கல்களை உருவாக்குகிறது. இரவு முழுவதும் தொலைபேசியை சார்ஜில் வைப்பது பேட்டரியில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அது விரைவாக சேதமடையக்கூடும். அதிகமாக சார்ஜ் செய்வதும் போனில் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தக்கூடும். பேட்டரி 80 சதவீதம் சார்ஜ் ஆனதும், உடனடியாக சார்ஜரை அகற்றவும்.
  • கவரை அகற்றாமல் போனை சார்ஜ் செய்ய வேண்டாம். தொலைபேசியின் கவர் தடிமனாக இருந்தாலோ அல்லது காற்று உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றாலோ, சார்ஜ் செய்யும்போது தொலைபேசி அதிக வெப்பமடையக்கூடும். சார்ஜ் செய்யும்போது தடிமனான கவர்களை அகற்றவும், இதனால் வெப்பம் வெளியேறும்.

Follow Us