AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EMI-ல் ஐபோன் வாங்குவது சிறப்பானதா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

Buying iPhone With EMI | ஐபோன் என்பது பலருக்கும் மிகவும் பிடித்த தேர்வாக உள்ளது. இதன் காரணமாக பலரும் மாத தவணை முறையிலாவது ஐபோன் வாங்க நினைக்கின்றனர். இந்த நிலையில், உண்மையாகவே மாத தவணை முறையில் ஐபோன் வாங்குவது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EMI-ல் ஐபோன் வாங்குவது சிறப்பானதா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Mar 2026 15:45 PM IST

உலக அளவில் முன்னணி ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் (Apple) உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் தரம் மற்றும் சிறப்பு அம்சங்கள் காரணமாக பலரும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், என்ன ஒரு சிக்கல் என்றால் ஐபோன்கள் சற்று விலை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக பலராரும் ஐபோன்களை வாங்கி பயன்படுத்த முடியாது. ஆனால், சிலரோ எப்படியாவது ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் மாத தவணை முறையில் ஐபோன் வாங்குகின்றனர். இந்த நிலையில், மாத தவணை முறையில் ஐபோன் வாங்குவது சிறப்பானதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இஎம்ஐ-ல் ஐபோன் வாங்கலாமா? – பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

நடுத்தர குடும்பங்களை பொருத்தவரை ஐபோன் ஆடம்பரமான பொருளாகவே உள்ளது. காரணம், ஒரு ஐபோனை வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.60,000 செலவு செய்ய வேண்டும். அந்த பணம் குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணத்திற்கோ, வீட்டு வாடகை மற்றும் மருத்துவ செலவுகளுக்கோ பயன்படலாம். எனவே மொத்தமாக பணத்தை செலவு செய்து ஐபோன் வாங்கினால் தானே நிதி சுமை ஏற்படும், நோ காஸ்ட் இஎம்ஐ மூலம் வாங்கிக்கொள்ளலாம் என பலரும் நினைக்கின்றனர்.

இதையும் படிங்க : இரவோடு இரவாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு

பலரும் நினைப்பதை போல நோ காஸ்ட் இஎம்ஐ உண்மையாகவே நோ காஸ்ட் இஎம்ஐ ஆக செயல்படாது. மாத தவணை முறையில் ஐபோன் வாங்குவதன் மூலம் கூடுதல் தொகைகளை மறைமுகமாக செலுத்த வேண்டி இருக்கும். எனவே மாதம் மாதம் சிறிய தொகையை எந்த வித சிக்கலும் இல்லாமல் பணத்தை திருப்பி செலுத்திவிடலாம் என நினைப்பர்கள் இதனை கவனத்தில் கொள்வது அவசியமாக உள்ளது.

மாத தவணையில் ஐபோன் வாங்குவது தவறான முடிவா?

மாத தவணை முறையில் ஐபோன் வாங்குவதை முற்றிலும் தவறானது என கூறிவிட முடியாது. காரணம், ஐபோனை முதலீடாக கருதுகிறீர்கள் அல்லது அந்த ஐபோனை வாங்கியதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்றால் அதில் தாரளமான மாத தவணை முறையில் வாங்கி முதலீடு செய்யலாம். இல்லையென்றால் மாத தவணை முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி வாங்குவது சிறந்த முடிவாக இருக்காது. காரணம் மின்சாதன பொருட்களை வாங்கியதுமே அதன் மதிப்பு குறைந்துவிடும். எனவே தேவைக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us