இந்த ஒரே ஒரு செயலி போதும்.. காணாமல் போன ஸ்மார்ட்போன் உங்கள் வசம் வந்துவிடும்!
Google's Find My Device | பொதுமக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருப்பது தான் ஸ்மார்ட்போன். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் இல்லையென்றால் பல வேலைகளை செய்து முடிக்க முடியாது. எனவே உங்களது ஸ்மார்ட்போன் திடீரென காணாமல் போய்விட்டால் கவலை வேண்டாம். கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் செயலியை பயன்படுத்தி மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் தங்களது அன்றாட வாழ்வுக்கான பல தேவைகளை ஸ்மார்ட்போன்கள் மூலம் பூர்த்தி செய்துக்கொள்னின்றனர். அதுமட்டுமன்றி, எங்கு சென்றாலும் ஸ்மார்ட்போனை உடன் எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பல இடங்களுக்கு ஸ்மார்ட்போனை எடுத்துச் செல்வது அது தொலைந்துபோவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அவ்வாறு, உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துப்போனால் கவலைப்பட தேவையில்லை. கூகுளின் ஒரே ஒரு செயலியை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போன் எங்கு இருந்தாலும் அதனை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ்
தொழில்நுட்பத்தில் வளர்ச்சியால் தற்போது அனைத்துமே சத்தியமாகிறது. அந்த வகையில், கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் (Google Find My Device) செயலி மூலம் தொலைந்துப்போன ஸ்மார்ட்போன் எங்குள்ளது என்பதை மிக சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். அதற்கு தொலைந்துபோன ஸ்மார்ட்போனில் கூகுள் கணக்கு லாக் இன் செய்யப்பட்டிருக்க வேண்டும். போனில் லொகேஷன் (Location) ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிறகு தொலைந்த அந்த ஸ்மார்ட்போன் வைஃபை (WiFi) அல்லது மொபைல் நெட்வொர்க் (Mobile Network) உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை ஸ்மார்ட்போனின் இணையம் துண்டிக்கப்பட்டு இருந்தாலும், அந்த ஸ்மார்ட்போன் எங்கே கடைசியாக சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது என்ற தகவலின் அடிப்படையில் ஸ்மார்ட்போனை கண்டுபிடித்துவிடலாம்.
ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடிப்பது எப்படி?
- உங்கள் ஸ்மார்ட்போன் காணாமல் போன உடன் மற்றொரு ஸ்மார்ட்போன் அல்லது கணினியை பயன்படுத்தி android.com/find என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அல்லது Find My Device செயலியை பயன்படுத்த வேண்டும்.
- தொலைந்துப்போன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே கணக்கு மூலம் உள்நுழைய வேண்டும்.
- பிறகு உங்களது ஸ்மார்ட்போன் என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இதனை தொடர்ந்து தொலைந்துப்போன உங்கள் ஸ்மார்ட்போன் எங்குள்ளது என்பதை கூகுள் மேப்பில் (Google Map) துல்லியமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : போனில் இந்த செட்டிங்ஸை மாற்றுங்கள் – யாராலும் திருட முடியாது! – எப்படி செய்வது?




மேலும் சில சிறப்பு அம்சங்கள்
கூகுளின் இந்த ஃபைண்ட் மை டிவைஸ் அம்சத்தை பயன்படுத்தி தொலைந்துப்போன ஸ்மார்ட்போன் எங்குள்ளது என்பதை கண்டுபிடிப்பது மட்டுமன்றி, அதில் மேலும் சில செயல்களை செய்யலாம்.
சத்தமாக ஒலி எழுப்பலாம்
இந்த செயலியை பயன்படுத்தி உங்களது தொலைந்துப்போன ஸ்மார்ட்போனில் சத்தமாக ஒலி எழுப்பலாம். உங்கள் ஸ்மார்ட்போன் சைலண்ட் மோடில் இருந்தால் கூட இத சத்தத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உங்களது ஸ்மார்ட்போன் இருந்தால் அதனை மிக எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
லாக் செய்யலாம்
உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துப்போன உடன் இந்த செயலியை பயன்படுத்தி அவற்றை லாக் செய்யலாம். மேலும், உங்கள் ஸ்மார்ட்போனின் லாக் ஸ்கிரீனில் மீட்பு செய்தி அல்லது தொடர்பு எண்ணையும் இணைக்கலாம். இது உங்கள் ஸ்மார்ட்போன் யார் கையிலாவது கிடைத்தால் அவர் உங்களை தொடர்ப்புக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.