Smartphone Hack : உஷார்.. ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டதை எச்சரிக்கும் அறிகுறிகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Is Your Smartphone Hacked | ஸ்மார்ட்போன்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தாலும், அவை ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள தகவல்கள் திருடப்படடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பலருக்கும் தெரியாமலே உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட்போன்கள் ஹேக் செய்யப்பட்டதை எச்சரிக்கும் சில முக்கிய விஷயங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஸ்மார்ட்போன் இல்லாமல் அன்றாட வேலைகளை செய்ய முடியாது என்ற சூழலில், அனைவரது வாழ்விலும் ஸ்மார்ட்போன் ஒரு அங்கமாக மாறிவிட்டது. முன்னதாக பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை எல்லாம் தற்போது ஸ்மார்ட்போனின் உதவியுடன் மிக எளிதாக சில நிமிடங்களில் செய்து முடித்துவிட முடிகிறது. என்னதான் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும், அதில் சில சிக்கல்களும் உள்ளன. குறிப்பாக ஒருவரின் ஸ்மார்ட்போனை ஹேக் (Hack) செய்வதன் அவரது அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் திருட முடியும்.
அவ்வாறு ஸ்மார்ட்போன்கள் ஹேக் செய்யப்படும் பட்சத்தில் வங்கி கணக்கு, தனிப்பட்ட புகைப்படங்கள், முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு அவர்களது ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியது. அவர்கள் இயல்பாக தங்களது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திக்கொண்டு இருப்பர். ஆனால், பின்னால் தகவல்கள் திருடப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த நிலையில், உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும் சில முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அடிக்கடி பேட்டரி குறைவது
உங்கள் ஸ்மார்ட்போன் ஏதேனும் வைரஸ் தாக்குதலுக்கு அல்லது ஹேக் செய்யப்பட்டு இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ் குறையும். காரணம் மால்வேர்கள் மற்றும் வைரஸ்கள் பின்னணியில் இயக்கும் நிலையில், அவை அதிக சார்ஜ் எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக அடிக்கடி பேட்டரி குறையும் பிரச்னை ஏற்படலாம். எனவே உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி சிக்கலை சந்தித்தால் அது குறித்து உடனடியாக ஆய்வு செய்யுங்கள்.




அதிக டேட்டா பயன்பாடு
ஸ்மார்ட்போன் பேட்டரியை போலவே டேட்டா பயன்பாடு அதிகரிப்பதும் ஸ்பை செயலிகளின் எச்சரிக்கையாக இருக்கலாம். காரணம், ஸ்பை செயலிகள் External Server-ஐ பயன்படுத்தும். இதன் காரணமாக கூடுதல் டேட்டா பயன்படுத்தப்படும். இந்த நிலையில், உங்கள் டேட்டா பயன்பாட்டை சோதனை செய்து பாருங்கள்.
இதையும் படிங்க : போனில் இந்த செட்டிங்ஸை மாற்றுங்கள் – யாராலும் திருட முடியாது! – எப்படி செய்வது?
ஸ்மார்ட்போனில் ஏற்படும் சிக்கல்கள்
ஸ்மார்ட்போன் அடிக்கடி ஹேங் ஆகுவது, ஏதேனும் செயலை செய்து முடிக்க கூறி தொடர்ந்து குறுஞ்செய்தி வருவது மற்றும் செயலிகள் அடிக்கடி செயல்படாமல் போவது உள்ளிட்டவையும் ஸ்பை செயலிகளின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் உங்கள் ஸ்மார்ட்போனில் அசாதாரனமாக விஷயம் நடப்பதை எச்சரிக்கின்றன. எனவே அவற்றை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
அறிமுகமில்லாத செயலிகள்
ஸ்மார்ட்போன் பயனர்கள் பல்வேறு தேவைகளுக்காக பல செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், நீங்கள் பதிவிறக்கம் செய்யாத, பயன்படுத்தாத, உங்களுக்கு இதுவரை அறிமுகமில்லாத செயலிகள் எதுவும் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனடியாக அவற்றை நீக்கம் செய்யுங்கள். அவை ஸ்பை தாக்குதலுக்கு பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளாக இருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன்களை ஸ்பை மற்றும் மால்வேர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.