AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதா?.. இந்த சில அம்சங்களை பயன்படுத்தி கண்காணியுங்கள்!

Security Tools to Protect Passwords From Scams | தற்போதைய சூழலில் அனைத்து விதமான செயலிகள், இணையதளங்கள் ஆகியவற்றுக்கு பாஸ்வேர்டு உள்ளது. இருவரின் அனுமதியின்றி மற்றொடுவர் செயலிகள் மற்றும் இணையதளத்தை பயன்படுத்த கூடாது என்பதால் தான் அது உள்ளது. இந்த நிலையில், பாஸ்வேர்டு திருடப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

உங்கள் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதா?.. இந்த சில அம்சங்களை பயன்படுத்தி கண்காணியுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jun 2025 14:00 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்திற்கும் பாஸ்வேர்டு வைப்பது கட்டாயமாக உள்ளது. பாஸ்வேர்டு வைக்கவில்லை என்றால் சில இணையதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்த முடியாமல் போய்விடும் நிலை உள்ளது. பாதுகாப்பு கருதி இந்த பாஸ்வேர்டு அம்சம் செயல்பாட்டில் உள்ள நிலையில், பாஸ்வேர்டு திருடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு பாஸ்வேர்டு திருடப்படடால் அதன் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில், உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக உள்ளதா, அதனை யாரேனும் ஹேக் செய்துவிட்டார்களா, அவ்வாறு ஹேக் செய்யப்பட்டால் அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை இந்த சில அம்சங்கள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

கூகுள் பாஸ்வேர்டு செக்அப்

நீங்கள் கூகுள் குரோமில் (Google Chrome) உங்கள் பாஸ்வேர்டை சேவ் செய்து வைத்திருந்தால், அதனை கூகுள் பாஸ்வேர்டு செக்அப் (Google Password Check Up) மூலம் சோதனை செய்யலாம். அதன் மூலம் உங்களது பாஸ்வேர்டு, வேறு யாராலேனும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம். இது வலிமையற்ற பாஸ்வேர்டு குறித்து தெரியப்படுத்துவது மட்டுமன்றி, உங்களது பாஸ்வேர்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணித்துக்கொண்டு இருக்கும்.

கூகுள் ஒன் டார்க் வெப் ரிப்போர்ட்

கூகுளின் இந்த ஒன் டார்க் வெப் ரிப்போர் இந்த (One Dark Web Report)  அம்சம் டார்க் வெப் செயலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கிறது. உங்கள் மொபைல் எண், ஜிமெயில் முகவரி ஆகியவை வேறு யாருக்கேனும் பகிரப்பட்டுள்ளதா அல்லது வேறு யாரேனும் அதனை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம். இது தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

ஆப்பிள் ஐ கிளவுட் கீ செயின் பாஸ்வேர்டு மானிடர்

ஆப்பிள் ஐ கிளவுட் கீ செயின் பாஸ்வேர்டு மானிடர் (Apple iCloud Key Chain Password Monitor) அம்சம் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவி செய்கிறது. நீங்கள் ஆப்பிள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் நபராக இருந்தால் அது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் பாஸ்வேர்டுகளை பாதுகாக்க உதவும். இது iOS மற்றும் macOS ஆகியவற்றில் வேலை செய்யும்.

மேற்குறிப்பிட்ட இந்த செயலிகள் மற்றும் அம்சங்கள் உங்கள் பாஸ்வேர்டை பாதுகாப்பாக வைத்து, மோசடிகளில் சிக்கிக்கொள்ளலாமல் பாதுகாக்க உதவும்.

Follow Us