Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்க வைஃபை பிரச்னையா? இண்டர்நெட் ஸ்லோவாக இருக்கிறதா? எப்படி சரி செய்வது?

Troubleshooting Wi-Fi Issues : இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி, வேலை போன்ற தேவைகளுக்கு அதிவேக இண்டர்நெட் தேவைப்படுகிறது. சில நேரங்களில் நம் வீட்டில் இருக்கும் வைஃபை சில நேரங்களில் மெதுவாக செயல்படும். இதனால் நம் வேலை தடைபடலாம். இந்த கட்டுரையில் இதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

உங்க வைஃபை பிரச்னையா? இண்டர்நெட் ஸ்லோவாக இருக்கிறதா? எப்படி சரி செய்வது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 06 Jul 2025 20:17 PM

சமீப காலமாக வேலை, கல்வி என்று அனைத்திற்கும் இண்டர்நெட்டின் தேவை மிக அவசியமாகியிருக்கிறது. இண்டர்நெட் இல்லாமல் இயங்கவே முடியாத நிலையில் இருக்கிறோம். நிலைமை இப்படி இருக்க ஆனால் வீடு, அலுவலகம், கஃபே – எங்கிருந்தாலும் வைஃபை (Wi-Fi) மெதுவாக இயங்கினால் எளிதாக நம்மை டென்ஷனாக்கும். இன்று பலரும் வீட்டில் இருந்தே பணிபுரிகிறார்கள். பலரும் யூடியூப், இன்ஸ்டா கிரியேட்டர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேகமான இண்டர்நெட் கணெக்ஷன் மிக அவசியம். இந்த நிலையில் மெதுவான இண்டர்நெட்டால் உங்கள் வேலை தடைபட்டாலோ, முக்கிமான வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும்போது யூடியூப் ஹேங் ஆனாலோ சில விஷயங்களை சரிபார்ப்பதன் மூலம் உங்கள் பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

ரவுட்டரின் இடம் சரியாக இருக்கிறதா என பாருங்கள்

சிக்னல் கிடைக்கும்படி ரவுட்டரை சரியான இடத்தில் வைப்பது அவசியம். டேபிள், டிவி என எதன் பின்னாலும் மறைத்து வைத்திருந்தாலும் உங்கள் வைஃபை சிக்னல் தடைபடலாம். அதனால் சரியான இடத்தில் வைப்பது அவசியம்.

டிவைஸ்களின் எண்ணிக்கை

வீடுகளில் இருக்கும் வைஃபைகள் சில டிவைஸ்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால் இண்டர்நெட் வேகம் குறையலாம். இதனால் தேவைக்கு ஏற்ப ஒரு சில டிவைஸ்களை தவிர, மற்றவற்றில் இணைப்பை துண்டிக்கலாம்.

பழைய ரவுட்டரா?

பழைய ரவுட்டர்கள் வேகமாக செயல்படாது. மேலும் குறிப்பிட்ட சில டிவைஸ்களுக்கு சப்போர்ட் செய்யாது.  எனவே டூயல் பேண்ட் அல்லது வைஃபை 6 ரவுட்டர் வாங்கி பயன்படுத்தலாம். இது உங்கள் இணைய வேகம் மற்றும் தரம் இரண்டும் அதிகரிக்கும்.

 பிற கருவிகளால் ஏற்படும் குறுக்கீடு

மைக்ரோவேவ், ப்ளூடூத், போன்கால் போன்றவற்றால் வைஃபை சிக்னல் பாதிக்கலாம். ரவுட்டரை இவற்றில் இருந்து பாதிக்காத இடத்தில் வைக்கவும்.

அதிக டேட்டா பயன்பாடு

நெட்ஃபிளிக்ஸ், கேம் அப்டேட் போன்றவை அதிக டேட்டாவை பயன்படுத்தும். இதனை தவிர்க்க பெரிய டவுன்லோடுகளை இரவில் செய்யவும்.

 ரவுட்டர் அப்டேட்

பழைய firmware காரணமாக வேகம், பாதுகாப்பு இரண்டும் பாதிக்கலாம். இதனை தவிர்க்க ரவுட்டர் செட்டிங்ஸில் சென்று firmware அப்டேட் ஆகி இருக்கிறதா என பார்க்கவும்.

ஐபிஎஸ் பிரச்னையாக இருக்கலாம்.

சில நேரங்களில் தாமதத்திற்கு உங்கள் இணைய சேவை நிறுவனம் தான் காரணமாக இருக்கலாம். இதனை தெரிந்துகொள்ள முதலில் ஸ்பீட் டெஸ்ட் செய்யவும். வேகம் குறைவாக இருந்தால் சேவை நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்.

டிவைஸ் பழையதாக இருக்கலாம்

சில நேரங்களில் பழைய லேப்டாப், மொபைல் அதிக வேக இண்டர்நெட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறும். எனவே புதிய டிவைஸில் முயற்சிக்கவும்.

வைஃபை எக்ஸ்டென்டர்  தேவைப்படலாம்

பெரிய வீடுகளில் ஒரே ரவுட்டர் போதாதது. இதற்கு தீர்வாக வைஃபை எக்ஸ்டென்டர் பயன்படுத்தலாம்.