Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Television Cleaning : தொலைக்காட்சியை சுத்தம் செய்யும்போது செய்ய 5 கூடாத தவறுகள்!

Mistakes in Cleaning Television Screens | பெரும்பாலான பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள தொலைக்காட்சிகளை சுத்தம் செய்வதாக நினைத்துக்கொண்டு, தொலைக்காட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களை செய்வர். இந்த நிலையில், தொலைக்காட்சியை பாதிக்கும் சில சுத்தம் செய்யும் முறைகள் குறித்தும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Television Cleaning : தொலைக்காட்சியை சுத்தம் செய்யும்போது செய்ய 5 கூடாத தவறுகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Jun 2025 14:45 PM IST

மனிதர்களின் அன்றாட வாழ்வின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக உள்ளது தான் தொலைக்காட்சிகள் (Television). தொலக்காட்சிகள் மூலம் நிகழ்ச்சிகள், பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை பார்க்க முடியும். தற்போதைய காலத்தில் வடிவமைக்கப்படும் தொலைக்காட்சிகள் மேலும் பல சிறப்பு அம்சங்களை கொண்டவையாக உள்ளன. பெரிய திரை, சிறந்த காட்சிகள், ஒலி என மேலும் பல அம்சங்கள் உள்ளன. தொலைக்காட்சிகள் பாதுகாப்பாகவும், சிறப்பானதாகவும் இருக்க அவற்றை முறையாக பராமரிப்பது வசியமாக உள்ளது. இந்த நிலையில், தொலைக்காட்சிகளை சுத்தம் செய்யும் போது செய்ய கூடாத தவறுகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொலைக்காட்சி ஸ்கிரீனை சுத்தம் செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள்

தொலைக்காட்சி ஸ்கிரீனை சுத்தம் செய்யும்போது  செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேப்பர் டவல் மற்றும் டிஷு

பேப்பர் டவல் மற்றும் டிஷு பயன்படுத்தி தொலைக்காட்சி ஸ்கிரீனை சுத்தம் செய்வதற்கு சுலபமானவையாக இருந்தாலும், அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதாவது பேப்பர் டவல் மற்றும் டிஷுக்கள் சிராய்ப்பு தன்மை கொண்டவை. இதன் காரணமாக தொலைக்காட்சி ஸ்கிரீன்களில் கீரல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கிளாஸ் கிளீனர்ஸ்

தொலைக்காட்சி ஸ்கிரீன்கள் Glass Per Se ஆல் உருவாக்கப்படும். இதன் காரணமாக வீட்டில் இருக்கும் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிளாஸ் கிளீனர்களை தொலைக்காட்சியில் பயன்படுத்த கூடாது. அவற்றில் அபாயகரமான கெமிக்கல்கள் இருப்பதால் அவை உங்களது தொலைக்காட்சியின் ஸ்கிரீன்களை கடுமையாக பாதிக்கும்.

கடினமான துணிகள் மற்றும் ஸ்பாஞ்ச்

தொலைக்காட்சி ஸ்கிரீன்கள் சுத்தம் செய்ய கடினமான துணிகள் மற்றும் ஸ்பாஞ்ச் பயன்படுத்தப்படுவதும் ஒரு தவறான நடைமுறையாக கருதப்படுகிறது. அவை பார்ப்பதற்கு மிகவும் மெம்மையாக இருந்தாலும், அவை ஸ்கிரீனில் கீரல்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

ஸ்பிரே பாட்டில்கள்

சிலர் ஸ்பிரே பாட்டில்களை பயன்படுத்தி தொலைக்காட்சி ஸ்கிரீன்களை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். உண்மையில், அது ஒரு மோசமாக முறை ஆகும். காரணம், அவை தொலைக்காட்சியின் மின்சாதன அம்சங்களை உள் இருந்து பாதிக்கும் ஆபத்து கொண்டது.

வைப்பர்கள்

பெரும்பாலான பொதுமக்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வைப்பர்கள் அல்லது மேக்அப்-க்கு பயன்படுத்தப்படும் வைப்பர்களை பயன்படுத்தி தொலைக்காட்சி ஸ்கிரீன்களை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு சுத்தம் செய்வது தொலைக்காட்சி ஸ்கிரீனின் வெளிப்புற கோட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகள் தொலைக்காட்சியின் ஸ்கிரீன்களை பாதிக்கும் தன்மை கொண்டிருப்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.