AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்மார்ட்போன் கேமராவில் தரமான வீடியோக்கள் எடுக்கும் 10 சூப்பர் டிப்ஸ்!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில், தரமான வீடியோ உருவாக்க தொழில்முறை கேமரா தேவையில்லை. ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் மற்றும் சில தொழில்நுட்ப யுக்திகள் lதெரிந்தால் போதுமானவை. இந்த கட்டுரையில் உங்கள் ஸ்மார்ட்போனில் சினிமா லெவல் குவாலிட்டியில் வீடியோ எடுக்க உதவும் 10 முக்கிய டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் கேமராவில் தரமான வீடியோக்கள் எடுக்கும் 10 சூப்பர் டிப்ஸ்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Jun 2025 20:50 PM IST

இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் கருவியாக மாறிவிட்டது. போட்டோ, வீடியோ எடுக்க இனி டிஎஸ்எல்ஆர் கேமராக்களை தேடிப்போக வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், நமது ஸ்மார்ட் போன்களே இன்று சிறந்த வீடியோக் கேமராக்களாக மாறிவிட்டன. அனைவரும் கிரியேட்டர்களாக மாறி வரும் வேளையில்  வீடியோ குவாலிட்டி தரமாக இருப்பதும் அவசியம். குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் சின்னசின்ன தொழில்நுட்ப யுக்திகளை தெரிந்து கொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் வீடியோவுக்கு சினிமா (Cinema) லெவல் குவாலிட்டி கிடைக்கும். இதோ, உங்கள் ஸ்மார்ட்போனில் தரமான வீடியோ எடுப்பதற்கான 10 எளிய டிப்ஸ்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

1.4கே குவாலிட்டியில் ஷூட் செய்யவும்

உங்கள் போனில் 4கே ரெஸல்யூஷன் உள்ளது என்றால் அதை ஆக்டிவேட் செய்யுங்கள். இது மிகவும் கிளாரிட்டியான வீடியோக்களை வழங்கும், மேலும் கிராப் செய்ய வசதியாக இருக்கும்.

2.கிரிட்லைன்ஸை ஆன் செய்யவும்

கேமெரா செட்டிங்ஸில் ‘rule of thirds’ என்ற கிரிட்டைஐ ஆன் செய்யுங்கள். இது வீடியோ ஷூட் செய்வததை மேம்படுத்தி, உங்களை சரியாக கிளாரிட்டியுடன் காட்டும்.

3.மேனுவல் செட்டிங்ஸை பயனபடுத்துங்கள்

ஆட்டோ மோடில் ஷூட் செய்யாமல், தரமான வீடியோ எடுக்க ISO, shutter speed, white balance போன்றவற்ற நீங்களாகவே உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள்.

4.ஃபிரேம் ரேட்டை சரியாக பயன்படுத்தவும்

வீடியோ எடுக்கும் போது 30fps என்பது சாதாரண வீடியோவிற்கு சரியாக இருக்கும். அதே நேரம் சினிமா லுக் வேண்டும் என்றால் 24fps பயன்படுத்துங்கள். மேலும் ஸ்லோமோஷன் வீடியோவுக்கு 60fps அல்லது 120fps பயன்படுத்தி எடிட்டிங்கில் ஸ்லோமோஷன் வீடியோ எடுக்கலாம்.

5. டிஜிட்டல் ஜூம் தவிர்க்கவும்

ஜூம் பண்ணும்போது வீடியோ தரம் குறையும். அதற்கு பதிலாக உங்கள் கேமராவை அருகில் கொண்டு சென்று ஷுட் செய்யுங்கள்.

6.லைட்டை சரியாக கட்டுப்படுத்துங்கள்

நேசுரல் லைட்டை பயன்படுத்துங்கள். ஜன்னல் அருகே, அல்லது கோல்டன் ஹவர் நேரத்தில் ஷூட் செய்தால் மென்மையான ஒளி கிடைக்கும். தேவையெனில் ரெஃப்ளெக்டர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

7.புதுமையான கேமரா கோணங்களை முயற்சிக்கவும்

எப்போதும் கண் மட்ட அளவிலே ஷூட் செய்ய வேண்டியதில்லை. கீழிருந்து மேலாக அல்லது மேலிருந்து கீழாக ஷூட் செய்ய முயற்சிக்கலாம். வித்தியாசமான கோணங்கள் உங்கள் வீடியோவை ரசிக்கும் படியாக மாற்றும்.

8.போனை சரியான பொஷினில் வைக்கவும்

டிரைபேட் அல்லது கிம்பல் கொண்டு வீடியோவை பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் வீடியோ தெளிவாக இருக்கும்.

9. மிகச்சிறந்த ஒலி தரம் வேண்டும் என்றால் மைக் பயன்படுத்துங்கள்

Phone-லிருக்கும் mic-ஐ விட வெளிப்புற lavalier mic அல்லது shotgun mic பயன்படுத்தினால், குரல் மிகச்சிறந்த முறையில் பதிவு செய்யப்படும்.

10. சரியான அளவில் வீடியோவை எக்ஸ்போர்ட் செய்யவும் 

யூடியூபிற்கு 1080p/4K என்ற அளவில் எக்ஸ்போர்ட் செய்யவும், இன்ஸ்டாகிராமுக்கு வெர்டிகள் ஃபார்மட் (9:16) பயன்படுத்தவும்.

Follow Us