வாட்ஸ்அப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய 8 சீக்ரெட்கள்! இனி உங்க வேலை ஈஸி!
8 Powerful WhatsApp Tricks : வாட்ஸ்அப் இன்றியமையாத செயலியாக மாறியிருக்கிறது. இதில் மெசேஜ், ஆடியோ, வீடியோ கால், யுபிஐ வசதி என மக்களுக்கு பல பயனுள்ள வசதிகளை வழங்கி வருகிறது. மேலும் வாட்ஸ்அப் சாட் பகுதியை சுலபமானதாக மாற்ற சில வசதிகளை வழங்குகிறது. இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள 8 டிப்ஸ்களை தெரிந்துகொள்வதன் மூலம் வாட்ஸ்அப் எளிதாக மாறும்.

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) இருந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் மெசேஜிங், வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள், யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல வசதிகளை வழங்குகிறது. இதன் காரணமாக மக்களுக்கு வாட்ஸ்அப் ஒரு இன்றியமையாத செயலியாக மாறியிருக்கிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகள் கூட இதனை ஆசிரியர்களுடன் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். மேலும் மக்களின் வசதிக்கு ஏற்ப நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை வாரி வழங்கி வருகிறது. வாட்ஸ்அப்பில் சில சீக்ரெட்கள் இருக்கின்றன. இவற்றை தெரிந்துகொள்வதன் மூலம் வாட்ஸ்அப் பயன்பாடு இன்னும் எளிதாக மாறும். இந்த கட்டுரையில் வாட்ஸ்அப் பயன்பாட்டை எளிதாக மாற்ற 8 முக்கியமான டிப்ஸ்களைப் பார்க்கலாம்.
1. வார்த்தைகளை போல்ட் மற்றும் இட்டாலிக் வடிவத்தில் மாற்ற
- வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை வேர்டு டாக்குமென்ட் போல அழகாக வடிமைக்கலாம். குறிப்பாக வார்த்தைகளை போல்டாக மாற்ற வார்த்தைக்கு முன்னும் பின்னும் * குறியீடை இட வேண்டும். உதாரணமாக WhatsApp என்ற வார்த்தையை போல்டாக மாற்ற *WhatsApp* என்று டைப் செய்ய வேண்டும்.
- அதே போல WhatsApp என்ற வார்த்தையை இட்டாலிக் (Italic) ஆக மாற்ற அதற்கு முன்னும் _ என்ற குறியீட்டை இட வேண்டும். உதாரணமாக _WhatsApp_ என டைப் செய்தால் அந்த வார்த்தை இட்டாலிக்காக மாறும்.
- வார்த்தைகளை மேல் கோடிட வேண்டும் என்றால் அதன் முன்னும் பின்னும் ~ என்ற குறியீட்டை இட வேண்டும். உதாரணமாக ~ WhatsApp~ என்று டைப் செய்தால் அந்த வார்த்தையை அடிப்பது போல மேலே கோடிடபடும்.
2. குறிப்பிட்ட மெசேஜ்களை தேடலாம்
- பழைய மெசேஜ் தேட நீண்ட நேரம் ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு கீழ்காணும் முறையில் செய்தால் நாம் தேடும் மெசேஜ் எளிதாக கிடைக்கும்.
- ஆண்ட்ராய்டு – குறிப்பிட்ட சாட் பகுதியில் சென்று Search என்பதை கிளிக் செய்து Keyword கொடுத்தால் கிடைக்கும்.
- ஐபோனில் காண்டாக்டில் Chat Info பகுதியில் உள்ள Chat Search என்பதில் நீங்கள் தேடும் Keyword கொடுத்தால் நீங்கள் தேடும் மெசேஜ் கிடைக்கும்.
- குறிப்பாக நேரம், நாள் அடிப்படையில் மெசேஜ்களை தேடும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும்.
3. ‘View Once’ – ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்
ரகசியமான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அனுப்பும்போது இது பயனாக இருக்கும்.
வழக்கமாக போட்டோ, வீடியோ அனுப்பும்முறையில் போட்டோவை செலக்ட் செய்து Send கொடுப்பதற்கு பக்கத்தில் இருக்கும் 1 என்ற ஆப்சனை கிளிக் செய்தால் அந்த போட்டோ ஒரு முறை மட்டுமே அனுப்பப்படும். அதாவது நீங்கள் அனுப்பும் நபர் ஒருமுறை மட்டுமே அந்த போட்டோவை பார்க்க முடியும். அதை சேமிக்கவோ அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ முடியாது.




4. கஸ்டம் வால்பேப்பர் அமைக்கலாம்
ஒவ்வொரு சாட்டுக்கும் தனித்தனியாக பின்புல வால்பேப்பரை மாற்ற முடியும். இதற்கு செட்டிங்ஸ் சென்று Chat என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து Default Chat Theme என்பதை கிளிக் செய்து Wallpaper என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுத்து உங்கள் போனில் இருந்து கேலரியில் இருக்கும் போட்டோவையோ அல்லது வாட்ஸ்அப் இமேஜையோ வால்பேப்பராக வைக்க முடியும்.
5. முக்கிய மெசேஜ்களை Pin செய்யலாம்
ஒரு சாட்டில் மூன்று முக்கிய மெசேஜ்களை பின் செய்யலாம். உதாரணமாக முகவரி, கடைசி தேதி, செய்ய வேண்டிய லிஸ்ட் ஆகியவற்றை பின் செய்யலாம்.
- இதற்கு ஆண்ட்ராய்டு போனில் பின் செய்ய வேண்டிய மெசேஜை லாங் பிரஸ் செய்து பின் செய்யலாம்.
- ஐபோனில் மெசேஜை வலப்புறம் ஸ்வைப் செய்து பின் செய்யலாம்.
6. ஸ்வைப் செய்து உடனே பதிலளிக்கும் வசதி
விரைவில் பதிலளிக்க விரும்பினால் அந்த மெசேஜ் மீது வலப்புரம் ஸ்வைப் செய்து குறிப்பிட்ட மெசேஜுக்கு மட்டும் Reply செய்யலாம்.
7. தானாகவே அழியும் மெசேஜ்கள்
அலுவலக உரையாடல்கள் போன்ற ரகசிய உரையாடல்களுக்கு சிறந்தது. இதன் மூலம் நம் விருப்பத்துக்கு ஏற்ப 24 மணி நேரம், 7 நாட்கள், 90 நாட்கள் என விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
-
Android: Settings > Privacy > Default Message Timer
-
iPhone: Privacy > Default Message Timer > Time & Apply
8. தானாக சேமிப்பதை நிறுத்தலாம்.
வாட்ஸ்அப் உங்களுக்கு வரும் படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் மொபைல் கேலரியில் சேமிக்கும். இது உங்கள் ஸ்டோரேஜை நிரப்பிவிடும். இதனை தவிர்க்கலாம்.
- செட்டிங் சென்று 3 செட்டிங்கிற்கு சென்று சாட்ஸ் பகுதியல் உள்ள Media visibility என்பதை Off செய்யலாம்.
- ஐபோனில் செட்டிங்கிற்கு சென்று சாட்ஸ் பகுதியில் Save to Photos என்பதை Off செய்யலாம்.