AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WhatsApp : வாட்ஸ்அப் மூலம் மிக சுலபமாக AI புகைப்படங்களை உருவாக்கலாம்.. எப்படி தெரியுமா?

Generate AI Images on WhatsApp | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் பல அதிரடி அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அம்சம் தான் Open AI. இந்த நிலையில், இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : வாட்ஸ்அப் மூலம் மிக சுலபமாக AI புகைப்படங்களை உருவாக்கலாம்.. எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Jun 2025 13:05 PM IST

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அம்சத்தை அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பலர் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் புகைப்படங்களை உருவாக்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை (Artificial Intelligence Images) உருவாக்கும் பலரும் அதற்கான செயலிகள் அல்லது இணையதளங்கள் மூலம் செய்கின்றனர். ஆனால், வாட்ஸ்அப் (WhatsApp) செயலியின் மூலமே மிக எளிதான செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை உருவாக்க முடியும். எந்த ஒரு இணையதளத்திற்கு செல்லவோ செயலியை பதிவிறக்கம் செய்யவோ அவசியம் இல்லை. அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செயற்கை நுண்ணறிவு அம்சங்கள்

தொழில்நுட்பத்தின் புரட்சியாக அறிமுகமாகியுள்ள செயற்கை நுண்ணறிவு அம்சம் அனைத்தையும் மிக எளிதாக மாற்றியுள்ளது. இதன் மூலம் பல விஷயங்களை மிக சுலபமாக செய்ய முடியும். குறிப்பாக இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் மூலம் கற்பனை காட்சிகளை புகைப்படங்களாக உருமாற்ற முடியும். அதாவது நாம் மனதில் தோன்றும் காட்சிகளை அப்படியே சாட்ஜிபிடியில் உள்ளிட்டால், அதற்கு ஏற்றார் போல் புகைப்படம் உருவாக்கப்படும். இதன் காரணமாக பலரும் இந்த அம்சத்தை பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்கி வருகின்றனர்.

வாட்ஸ்அப்பில் வந்த சாட்ஜிபிடி புகைப்பட உருவாக்க அம்சம்

பயனர்களின் நலனுக்காக மெட்டா (Meta) நிறுவனம் வாட்ஸ்அப்பில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு அம்சம் தான் செயற்கை நுண்ணறிவு புகைப்பட உருவாக்கம் (Artificial Intelligence Image Generation). இதனை பயன்படுத்தி இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு செல்லாமலே செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை உருவாக்க முடியும்.

வாட்ஸ் அப் மூலம் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்களை உருவாக்குவது எப்படி?

  1. அதற்கு முதலில் சாட்ஜிபிடியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை +1(800)242-8478 மொபைல் போனில் பதிவு செய்ய வேண்டும்.
  2. எண்ணை பதிவு செய்த பிறகு, அந்த என்ணுக்கு Hai என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
  3. அப்போது உங்கள் OpenAI கணக்கை லிங்க் செய்யுமாறும் சாட்ஜிபிடி கூறும்.
  4. அதற்காக கொடுக்கப்படும் லிங்க் மூலம் OpenAI கணக்கை லிங்க் செய்யுங்கள்.
  5. இதற்கு பிறகு நீங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் புகைப்படங்களை மிக சுலபமாக உருவாக்கலாம்.
  6. நீங்கள் எந்த மாதிரியான புகைப்படங்களை உருவாக்க விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ப Prompt வழங்கப்பட வேண்டும்.
  7. புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதற்கான Prompt-ஐ உள்ளிட வேண்டும்.
  8. உதாரணமாக, Turn This Image into Ghibli என பதிவிட்டால் ஒரு சில நொடிகளில் சாட்ஜிபிடி உங்களது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவால் மாற்றம் செய்துவிடும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி மிக எளிதாக எந்த புகைப்படத்தையும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் மாற்றம் செய்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us