Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

யூடியூப், இன்ஸ்டாகிராம் போல இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம் – எப்படி செயல்படும்?

Ad Update Alert: வாட்ஸ் அப் உலக அளவில் மக்களால் தவிர்க்க முடியாத மெசெஜிங் செயலியாக இருந்து வருகிறது. மக்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் தற்போது புதிதாக விளம்பரங்களை கொண்டுவரவிருக்கிறது. யூடியூப், இன்ஸ்டாகிராமில் இருப்பது போல இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம் இடம்பெறவிருக்கிறது.

யூடியூப், இன்ஸ்டாகிராம் போல இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரம் – எப்படி செயல்படும்?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 17 Jun 2025 19:20 PM

உலகளவில் அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள பிரபல மெசேஜிங்  செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) தற்போது ஒரு மிக முக்கியமான வணிக மாற்றத்தை மேற்கொள்ள தயாராகியுள்ளது. வாடஸ்அப் தற்போது மக்களிடையே தவிர்க்க முடியாத ஒரு செயலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மெட்டா (Meta) நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த செயலி, இதுவரை விளம்பரங்களின்றி செயல்பட்டு வந்தது. ஆனால் விரைவில், ஸ்டேட்டஸ் மற்றும் சேனல் பகுதிகளின் வழியாக விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாற்றம், வாட்ஸ்அப்பின் பயன்பாட்டிலும் மாறுதலுக்கு வழிவகுக்கும் என்பதோடு, மெட்டா நிறுவனத்தின் வருவாய் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு முக்கிய அங்கமாகவும் கருதப்படுகிறது.

வாட்ஸ்அப்பின் எந்த பகுதியில் விளம்பரங்கள் கொண்டுவரப்படும்?

மெட்டா  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்ஸ் ஆகிய இடங்களில் மட்டும் விளம்பரங்கள் இடம் பெறவுள்ளன. இந்த இரண்டு பகுதிகளும் வாட்ஸ்அப்பின் அப்டேட் எனப்படும் பகுதியில் காணப்படும். தினசரி சராசரியாக 1.5 பில்லியன் பயனர்கள் இந்த பகுதிகளை பயன்படுத்தி வருவதால், அதனையே மையமாக கொண்டு மெட்டா நிறுவனம் தனது விளம்பர திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.

பிரைவசி பாதிக்கப்படுமா?

இதுகுறித்து பயனர்கள் கவலைப்படத் தேவையில்லை. மெட்டா நிறுவனத்தின் புரொடக்சன் மேனேஜர் நிக்கிலா ஸ்ரீனிவாசன், தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் இதனை உறுதி செய்துள்ளார். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் ஸ்டேட்டஸ் அனைத்தும் end-to-end encryption செய்யப்பட்டவை. எனவே அவை எங்களின், எந்த விளம்பர நிறுவனங்களுடனும் அவை பகிரப்பட மாட்டாது. மேலும், பயனர்களின் தொலைபேசி எண்கள் விளம்பரதாரர்களுடன் பகிரப்படமாட்டது, அல்லது தனிப்பட்ட மெசேஜ் செயற்பாடுகள் விளம்பர இலக்காக பயன்படுத்தப்படமாட்டது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வாட்ஸ்அப்பின் அப்டேட்டஸ் தவிர்க்கும் வசதி

வாட்ஸ்அப்பின் செட்டிங்ஸ் பகுதியில்  அப்டேட்ஸ் பகுதியை தவிர்க்கும் வசதியை பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால், இந்த பகுதியில் ஈடுபடாதவர்கள் எந்தவித விளம்பரங்களையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை.

இன்ஸ்டாகிராம் போலவே ஸ்டேட்டஸ் இடையில் விளம்பரங்கள் கொண்டுவரப்படும். மேலும் டிஸ்கவரி பகுதியில் முக்கியத்துவம் பெறும் சேனல்களுக்கு விளம்பர இடம் வழங்கப்படும். சில சேனல்களுக்கு சந்தா கட்டும் முறை அறிமுகப்படுத்தப்படும். விளம்பரங்கள் பயனர்களின் நாடு, மொழி, அப்டேட்ஸ் டேபை பயன்படுத்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு காட்டப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தனிப்பட்ட பயன்பாடுகள் மற்றும் மெசேஜ் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்கள் வருவதில்லை என்பதை மெட்டா உறுதி செய்துள்ளது.

மெட்டா நிறுவனம் 2014-ம் ஆண்டு வாட்ஸ்அப்பை வாங்கிய பிறகு, இதுவரை அதன் பயன்பாட்டிலோ, வடிவமைப்பிலோ விளம்பரங்களைச் சேர்க்காமல் இருந்து வந்தது. ஆனால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களில் விளம்பர வருவாய் வளர்ந்தபோதும், வாட்ஸ்அப் மட்டும் விளம்பரங்களை சேர்க்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்த சின்மயின் 'முத்தமழை' பாடல்!
உலக டிரெண்டிங்கில் இடம்பிடித்த சின்மயின் 'முத்தமழை' பாடல்!...
இங்கிலாந்தில் 3 தொடர் வெற்றியே! யார் தலைமையில் கடைசி வெற்றி?
இங்கிலாந்தில் 3 தொடர் வெற்றியே! யார் தலைமையில் கடைசி வெற்றி?...
ஜிம்மிற்கு சென்ற சமந்தாவைக் கோபப்படுத்திய ரசிகர்கள் வீடியோ வைரல்!
ஜிம்மிற்கு சென்ற சமந்தாவைக் கோபப்படுத்திய ரசிகர்கள் வீடியோ வைரல்!...
அதிகமாக முடி உதிர்கிறதா? இந்த காரணங்களாக இருக்கலாம்
அதிகமாக முடி உதிர்கிறதா? இந்த காரணங்களாக இருக்கலாம்...
அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் டிரம்ப் மொபைல் - என்ன ஸ்பெஷல்?
அமெரிக்காவிலேயே உற்பத்தியாகும் டிரம்ப் மொபைல் - என்ன ஸ்பெஷல்?...
நடிகை பிரியாமணியின் நடிப்பில் வெளியாகும் வெப் சீரிஸ்...
நடிகை பிரியாமணியின் நடிப்பில் வெளியாகும் வெப் சீரிஸ்......
கூட்டணி ஆட்சி குறித்து பாஜக பேசுவது ஏன்..? திருமாவளவன் விளக்கம்!
கூட்டணி ஆட்சி குறித்து பாஜக பேசுவது ஏன்..? திருமாவளவன் விளக்கம்!...
இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி - எப்படி செயல்படும்?
இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி - எப்படி செயல்படும்?...
காப்பி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லாலின் துடரும் படம்...
காப்பி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மோகன்லாலின் துடரும் படம்......
சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை - நீயா நானா கோபிநாத் பேச்சு!
சச்சின் கொடுத்த 200 நம்பிக்கை - நீயா நானா கோபிநாத் பேச்சு!...
சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?...