Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள்.. மீட்பது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

WhatsApp Deleted Chats Recover | உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் மிக முக்கிய செயலியாக உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் சாட் திடீரென டெலிட் ஆகிவிட்டால் கடும் சிரமமாகிவிடும். இந்த நிலையில், டெலிட் ஆன வாட்ஸ்அப் சாட்களை மீண்டும் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக் பார்க்கலாம்.

WhatsApp : டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள்.. மீட்பது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Jun 2025 17:30 PM

பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் தகவல் பரிமாற்றத்திற்காக (Communication) பல்வேறு மொபைல் செயலிகளை (Mobile Apps) பயன்படுத்துகின்றனர். அத்தகைய செயல்களில் ஒன்றுதான் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி. இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயலி மூலம் மிக விரைவாகவும், எளிதாகவும் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால் இது பலருக்கும் மிகவும் பிடித்த செயலியாக உள்ளது. இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் மிக முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ள நிலையில், அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் எதிர்பாராத விதமாக டெலிட் செய்யப்பட்டால் கடும் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை மீட்டெடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய செயலியாக விளங்கும் வாட்ஸ்அப்

உலக அளவில் உடனடி தகவல் பரிமாற்றத்திற்காக பெரும்பாலான மக்கள் மெட்டா நிறுவனத்தின் செயலியை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி, ஆடியோ கால், வீடியோ கால், குரல் குறுஞ்செய்தி ஆகியவற்றின் மூலம் உரையாடலாம். அது மட்டுமன்றி புகைப்படங்கள்,  வீடியோ கால், ஆடியோ கால் மற்றும் ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். இவ்வாறு அனைத்து தகவல் பரிமாற்ற தேவைகளுக்கும் ஒரே தீர்வாக வாட்ஸ்அப் செயலி உள்ள நிலையில், சில முக்கிய தகவல்களை கூட பலர் வாட்ஸ்அப்பில் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் உரையாடல்கள் எதிர்பாராத விதமாக டெலிட் செய்யப்பட்டால் அவற்றை எப்படி மீட்பது என்பது குறித்து பார்க்கலாம்.

டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் – மீட்பது எப்படி?

  1. முதலில் கூகுள் டிரைவ் பேக் அப் (Google Drive Back Up) செக் செய்வதற்காக முதலில் Settings-க்கு செல்ல வேண்டும்.
  2. அதில் Chat என்பதை தேர்வு செய்து பிறகு அதில் இருக்கும் Chat Backup என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  3. அங்கு உங்களது மொபைல் எண்ணை வெரிஃபை செய்து Restore என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு வாட்ஸ்அப் செயலியை மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி வாட்ஸ்அப் செயலியை மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில், அதில் டெலிட் செய்யப்பட்ட உரையாடல்கள் அனைத்தும் மீண்டும் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.