செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடுகளை விரிவுபடுத்த, கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், 100 ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட பத்திரங்களை வெளியிட்டுள்ளது. மொத்தம் 31 பில்லியன் டாலர் மதிப்பிலான 100 ஆண்டு பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க டெக் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், கடன் மூலம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.