AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படாது.. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்!

Google's Important Announcement For Android Users | இந்தியாவை பொருத்தவரை ஏராளமான பொதுமக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படாது.. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக் கொடுத்த கூகுள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Feb 2026 16:17 PM IST

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்பாடு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு வீட்டிற்கு ஒருவர் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதே அரிதாக இருந்த நிலையில், தற்போது ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன் கையில் இல்லாதவர்களை பார்ப்பதே மிகவும் அரிதானதாக உள்ளது. பகுதி அளவு மக்கள் ஐஓஎஸ் (IOS) ஸ்மார்டோன்களை பயன்படுத்தும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்திய மொபைல் சந்தையிலும் இவை இரண்டும் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வந்த முக்கிய எச்சரிக்கை

இந்தியாவை பொருத்தவரை ஐஓஎஸ் பயனர்களை விடவும், ஆண்ட்ராய்டு பயனர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்கிறது. அவை சற்று விலை உயர்ந்தவை என்பதால், பெரும்பாலான பொதுமக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தான் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இயர் பட்சில் இப்படி ஒரு சிக்கலா?.. நொடியில் எல்லாமே முடிந்துவிடும்.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!

இனி பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படாது – கூகுள்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த அவ்வப்போது புதிய அப்டேட்டகள் வெளியிடப்படும். ஆந்த வகையில் ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் செல்போன் பயனர்களுக்கு கூகுள் (Google) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு 12 (Android 12) அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கி வரும் போன்களுக்கு இனி பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ07 5ஜி.. அதுவும் பட்ஜெட் விலையில்!

பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு

எனவே டேட்டா திருட்டு மற்றும் சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் உடனடியாக தங்களின் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கி வரும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us