புதிதாக பைக் வாங்க போறீங்களா?.. இந்த விஷயங்கள் குறித்து கட்டாயம் யோசிக்க வேண்டும்!
Analyze Before Buying A New Bike | புதியதாக பைக் வாங்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கும். ஆனால், பைக் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றை கவனிக்கவில்லை என்றால் சிக்கல் ஏற்படும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசை தங்களுக்கென சொந்தமாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்பதுதான். இதற்காக 18 வயது முடிவடைந்த உடனே பல இளைஞர்கள் அடம் பிடித்தாவது பைக் வாங்கிவிடுவர். ஆசைக்காக மட்டுமன்றி, தினசரி பயண தேவைகளுக்கும் பை அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. எனவே பைக் வாங்க வேண்டும் என்ற ஆசையில் சென்று பைக் வாங்காமல் அதற்கு முன்னால் சில அம்சங்கள் குறித்து ஆராய வேண்டியது அவசியமாக உள்ளது. அது என்ன என்ன அம்சங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பைக் வாங்குவதற்கு முன்பு ஆராய வேண்டிய அம்சங்கள்
எடுத்ததுமே பணத்தை கொடுத்து பிடித்த பைக்கை வாங்காமல், சில அம்சங்கள் குறித்து ஆராய வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
பட்ஜெட்
புதியதாக ஒரு பைக் வாங்க நீங்கள் எவ்வளவு செலவு செய்ய தயாராக உள்ளீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு செலவை யோசிக்கும்போது பை வாங்கும் செலவை மட்டும் யோசிக்காமல், வரும் காலத்தில் பைக்கிற்கு செய்ய வேண்டிய செலவுகளையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும். பை பராமரிப்பு, விபத்தில் சிக்கினால் சீரமைப்பு என அனைத்திற்கும் பணம் அதிகம் செலவாகும். இது ஒவ்வொரு பைக்கின் வகையை பொருத்து மாறுபடும். எனவே அது குறித்து கவனமாக இருக்க வேண்டும்.




இதையும் படிங்க : வாஷிங்மெஷினிலும் இருக்குது ஃபில்டர்… எப்படி சுத்தம் செய்வது தெரியுமா?
நோக்கம்
பைக் வாங்குவதற்கு முன்னதாக என்ன மாதிரியான பயண தேவைகளுக்கு வாங்குகிறீர்கள் என்பதை யோசிக்க வேண்டும். சிலர் நெடுந்தூரம் பயணம் செய்வர், சிலர் மலை பகுதிகளில் பயணம் செய்வர். ஒவ்வொரு பயண தேவைக்கும் ஏற்ப ஒவ்வொரு விதமான பைக்குகள் உள்ளன. எனவே பயண தேவை அறிந்து பைக்கை தேர்வு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க : அறிமுகம் செய்த கையோடு AI Image அம்சத்தை நீக்கம் செய்த மெட்டா.. காரணம் என்ன?
வடிவமைப்பு
ஒவ்வொரு பைக்கின் வடிவமைப்பும் வித்தியாசமானதாக இருக்கும். ஒருசில பைக்குகளின் வடிவமைப்புகள், சிலருக்கு பொருந்தும். ஆனால், ஒருசில வடிவமைப்புகள் சிலருக்கு பொருந்தாது. இதனால், வாகன ஓட்டிகள் வரும் காலத்தில் சிக்கலை எதிர்க்கொள்ள நேரிடும். எனவே உங்களுக்கு ஏற்ற வடிவமைப்பை கொண்ட பைக்கை வாங்குவது காலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.