AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரவில் வைஃபை, மொபைல் நெட்வொர்க்கை On-ல் வைத்திருப்பது ஆபத்தானதா?.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

Mobile and Wi Fi Network On During At Night | பெரும்பாலான வீடுகளில் வைஃபை வசதி உள்ளது. சிலர் இரவு நேரங்களில் வைஃபை ஆப் செய்யாமல் அப்படியே தூங்குகின்றனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் மொபைல் மற்றும் வைஃபை ஆஃப் செய்யாமல் தூங்குவது பாதுகாப்பானதா என்பது குறித்து பார்க்கலாம்.

இரவில் வைஃபை, மொபைல் நெட்வொர்க்கை On-ல் வைத்திருப்பது ஆபத்தானதா?.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Feb 2026 15:54 PM IST

இந்த நவீன உலகில் இணைய சேவை இல்லாமல் வாழவே முடியாது. இதற்காக பொதுமக்கள் தங்களது ஸ்மார்டோன்களுக்கு இணைய வசதியை ரீச்சார்ஜ் செய்வது முதல் வீடுகளில் வைஃபை வைத்திருப்பது வரை என 24 மணி நேரமும் இணைய சேவை பெறும் வசதிகளை செய்து வைத்துக்கொள்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் இரவு நேரங்களிலும் வைஃபை பயன்பாட்டில் வைக்கப்படுகிறது. பலர் இரவு நேரத்தில் கூட ஸ்மார்ட்போன் இன்டர்நெட்டை ஆஃப் செய்யாமல் தூங்குகின்றனர். இவ்வாறு பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ள நிலையில், இரவு நேரத்தில் அவற்றை பயன்பாட்டில் வைத்திருப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரவு நேரத்தில் செயல்பாட்டில் இருக்கு மொபைல் நெட்வொர்க், வைஃபை

வைஃபை மற்றும் மொபைல் நெட்வொர்க்கில் இருந்து Electromagnetic Fields அலைகள் வெளியேற்றம் செய்யப்படும். அவை Non – Ionizing Radiation பிரிவில் உள்ளன. அதாவது, அவற்றால் உடலின் டிஎன்ஏவை பாதிக்க முடியாது. வீடுகளில் பயன்படுத்தப்படும் வைஃபைகளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கும் என்றும் அவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக எந்த ஒரு ஆய்வுகளிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : ஏஐ வீடியோக்களுக்கு லேபிள் கட்டாயம்.. ஸ்டிரிக்டாக சொன்ன மத்திய அரசு!

சமீபத்திய ஆய்வுகள் கூறும் ஷாக் தகவல்கள்

வைஃபையில் இருந்து வெளியேறும் அலைகள் உடலுக்கு தீங்கு இழைக்க கூடியவை இல்லை என்று கூறப்படும் நிலையில், சமீபத்திய ஆய்வுகள் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளன. அதாவது, மின்சாதன பொருட்களில் இருந்து வெளியேறும் அலைகள் தூக்கத்தை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மின்சாதன பொருட்களில் இருந்து வெளியேறும் அலைகள் தூக்கத்திற்கு தேவையான மெலடோனின் ஹார்மோன்களை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2026-ன் ஆப்பிளின் முதல் ஸ்மார்ட்போன்.. விரைவில் அறிமுகமாகும் ஐபோன் 17 இ!

வைஃபை மற்றும் மொபை நெட்வொர்க்கால் ஏற்படும் பாதிப்புகளை விடவும் தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் எனவே பொதுமக்கள் அது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us