AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WhatsApp : அனிமேஷன் ஸ்டிக்கர் முதல் போட்டோ Poll வரை.. வாட்ஸ்அப்பில் வந்த பல அதிரடி அம்சங்கள்!

WhatsApp Unveils Exciting New Features | வாட்ஸ்அப் தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு சில அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அவை என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : அனிமேஷன் ஸ்டிக்கர் முதல் போட்டோ Poll வரை.. வாட்ஸ்அப்பில் வந்த பல அதிரடி அம்சங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 14 Jun 2025 14:11 PM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம், வீடியோ கால், ஆடியோ கால் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கு ஒரே தேர்வாக வாட்ஸ்அப் உள்ளது. இதன் காரணமாக அது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இவ்வாறு வாட்ஸ்அப் செயலிக்கு கோடிக்கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையிலும் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மேலும் சில அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்

பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிக அளவில் மொபைல் செயலிகளை (Mobile Apps) பயன்படுத்த தொடங்கிவிட்டனர். முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை, தற்போது மொபைல் செயலிகள் மூலம் மிக எளிதாகவும், விரைவாகவும் செய்து முடித்துவிட முடியும். ஒவ்வொரு தேவைகளுக்கும் ஏற்ப தனித்தனி செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. குற்றிப்பாக உணவு, உடைகள், காய்கறிகள், அழுகு சாதன பொருட்கள் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வகையில் பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில், உரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் உள்ளது.

வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அசத்தல் அம்சங்கள்

அதாவது வீடியோ கால்களை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கர்களாக (Animation Stickers) மாற்றி பகிரும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் சேனலில் புகைப்படங்கள் இல்லாமல் POLL போடுவதற்கான அம்சம் இருந்த நிலையில், தற்போது புகைப்படத்துடன் POLL போடுவதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. மேலும், வாட்ஸ்அப் வீடியோ காலில் புதியதாக 6 எஃப்கட்ஸ்களை (Effects) அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us