AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WhatsApp : இனி வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா?.. புதிய அம்சங்கள் கூறுவது என்ன?

WhatsApp Introduced 3 New Features | வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் மூன்று புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போலவே வருமானத்தை உருவாக்க Subscription உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

WhatsApp : இனி வாட்ஸ்அப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா?.. புதிய அம்சங்கள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Jun 2025 11:47 AM IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ளதாக உள்ளதால், பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் பல சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதால், அதற்கு உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் Subscription அம்சத்தை கொண்டுவர மெட்டா திட்டமிட்டுள்ளது.

1.5 பில்லியன் தினசரி பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் குறுஞ்செய்தி, ஆடியோ கால், வீடியோ கால், ஆடியோ குறுஞ்செய்தி, ஸ்டேட்டஸ், வாட்ஸ்அப் சேனல் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள அம்சங்கள் உள்ளன. அது தவிர வாட்ஸ்அப் செயலியை மேம்படுத்தும் வகையில் மெட்டா பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட வீடியோக்களை அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆக மாற்றுவது உள்ளிட்ட ஆறு அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்தது. இவ்வாறு பயனர்களுக்கு பயனுள்ள வகையில் பல அம்சங்களை வெளியிட்டு வரும் வாட்ஸ்அப், தற்போது ஒரு புதிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

Subscription திட்டத்தை கொண்டுவரும் வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளிட்ட செயலிகளில் விளம்பரங்கள் மற்றுக் Subscription உள்ள நிலையில், வாட்ஸ்அப்பில் மட்டும் அவை எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் விளம்பரங்களை காட்ட தொடங்கியுள்ளது. இது குறித்து கூறியுள்ள வாட்ஸ்அப், மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்துள்ளதாக கூறியுள்ளது. அதாவது, ஸ்டேட்டஸ்களில் விளம்பரம், சேனல்களுக்கு Subscription மற்றும் புரொமோடட் சேனல்ஸ் (Promoted Channels) உள்ளிட்ட அம்சங்களை அறிமுகம் செய்துள்ளதாக கூறியுள்ளது.

அதன்படி, இனி வரும் காலங்களில் உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் சேனல்களை கட்டணம் செலுத்தி தான் பார்க்க முடியும். இந்த புதிய மாற்றங்கள் குறித்து கூறியுள்ள வாட்ஸ்அப், இந்த மாற்றங்கள் எதுவும் உங்களது தனிப்பட்ட சாட்களை பாதிக்காது. அவை எப்போது போல பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us