Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது.. வந்தது புதிய அம்சம்!

New Update in WhatsApp For Storage Saving | ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அதிக அளவிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதால் ஸ்டோரேஜ் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது.. வந்தது புதிய அம்சம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 13 Jun 2025 22:13 PM

வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் நீண்ட நாள் சந்தித்து வந்த சிக்கலை தீர்த்து வைக்கும் வகையில்,  அந்த நிறுவனம் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவு பகிரப்படும் நிலையில், அதனை பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் மொபைல் போனில் ஸ்டோரேஜ் (Mobile Phone Storage) மிக சீக்கிரமாக நிரம்பிவிடுகிறது. இதன் காரணமாக, அவசர நேரத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களின் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் அதிக அளவு பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வர். அவ்வாறு பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், அவற்றுக்கு இணைய சேவை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஸ்டோரேஜ் முக்கியமாக உள்ளது. வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் ஒவ்வொரு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் ஸ்மார்ட் போனில் குறிப்பிட்ட அளவு ஸ்டோரேஜ் பிடித்தம் செய்யப்படும். இதன் காரணமாக பயனர்கள் ஸ்டோரேஜ் சிக்கலை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக, பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

தேவையான அளவில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்

ஒவ்வொரு பயனரின் ஸ்மார்ட்போனிலும் மாறுபட்ட ஸ்டோரேஜ் அளவுகள் இருக்கும். இந்த நிலையில், குறைந்த ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நபர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் தான், வாட்ஸ்அப் பதிவிறக்கம் அளவுகளை அறிமுகம் செய்துள்ளது. அதாவது HD Quality மற்றும் Standard Quality என இரண்டு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் ஸ்டோரேஜுக்கு ஏற்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

கூகுள் பிளேஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு 2.25.18.11-க்கான அண்மை வாட்ஸ்அப் பீட்டாவை (WhatsApp Beta) பதிவிறக்கம் செய்துள்ளவர்களால் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய நானி
டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய நானி...
சனிக்கிழமைகளில் இந்த பொருட்கள் வாங்காதீங்க.. நிதி பிரச்னை வரும்!
சனிக்கிழமைகளில் இந்த பொருட்கள் வாங்காதீங்க.. நிதி பிரச்னை வரும்!...
விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. எப்போது?
விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. எப்போது?...
அனிமேஷன் ஸ்டிக்கர் முதல் போட்டோ Poll வரை - வாட்ஸ்அப் அப்டேட்ஸ்!
அனிமேஷன் ஸ்டிக்கர் முதல் போட்டோ Poll வரை - வாட்ஸ்அப் அப்டேட்ஸ்!...
நீலகிரியில் 300 மி.மீ மழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
நீலகிரியில் 300 மி.மீ மழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்...
வீட்டின் உள்ளே சுரங்கப்பாதை அமைத்து டீசலை திருடிய கும்பல்..
வீட்டின் உள்ளே சுரங்கப்பாதை அமைத்து டீசலை திருடிய கும்பல்.....
நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானது
நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானது...
யோகாசனம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான 13 முக்கிய நன்மைகள்!
யோகாசனம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான 13 முக்கிய நன்மைகள்!...
எது ஒரு கேக் ரூ.5 லட்சமா? - இணையத்தில் தீயாய் பரவும் ஸ்கிரீன்ஷாட்
எது ஒரு கேக் ரூ.5 லட்சமா? - இணையத்தில் தீயாய் பரவும் ஸ்கிரீன்ஷாட்...
ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படம் எப்படி இருக்கு?
ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படம் எப்படி இருக்கு?...
சேலைக்கு ஃபால் தைப்பது ஏன் அவசியம்? - அறியாத நன்மைகள்!
சேலைக்கு ஃபால் தைப்பது ஏன் அவசியம்? - அறியாத நன்மைகள்!...