போன் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டதா? அப்போ இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!
Smartphone Storage Tips : ஸ்மார்ட்போன்களில் நாம் மீண்டும் மீண்டும் சந்திக்கும் பிரச்னை நமது போன் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டது என்பது தான். இந்த கட்டுரையில் போன் ஸ்டோரேஜ் நிரம்பும் பிரச்னையை எப்படி எளிதில் சரி செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் (Smartphone) இல்லாத ஆட்களே இல்லை எனலாம். அதில் நிறைய புகைப்படங்கள், வீடியோக்கள், செயலிகள் மற்றும் டாக்குமென்ட்கள் என முக்கிய ஆவணங்களை சேமித்து வைத்திருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் (Storage) நிரம்பி, பின்னர் போன் மெதுவாக இயங்கத் தொடங்கும். அதே நேரம் புதிதாக ஒன்றை டவுன்லோடு செய்வதும் கடினமாகிவிடும். குறிப்பாக அவசர காலக்கட்டங்களில் போன் மெதுவாக செயல்பட்டு சிக்கலை ஏற்படுத்தும். நீங்களும் இந்த சிக்கலை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டால், இந்த எளிய டிப்ஸை பயன்படுத்தி ஸ்டேரேஜ் நிரம்புவதை தடுக்கலாம்.
தேவையற்ற செயலிகளை டெலிட் செய்யலாம்
பல நேரங்களில் நாம் தேவையற்ற செயலிகளை டவுன்லோடு செய்கிறோம். ஆனால் அவை ஒரு முறை பயன்படுத்திய பிறகு மீண்டும் அதனை திறப்பதே இல்லை. அந்த செயலிகளுக்கான தேவை முடிந்துவிட்டது என்றால் அவற்றை உடனடியாக டெலிட் செய்யலாம். நீங்கள் பழைய கேம்கள் போன்ற தேவையற்ற செயலிகளை உடனடியாக டெலிட் செய்யலாம். இதற்கு, நீங்கள் போன் செட்டிங்கிற்கு சென்று, எந்த செயலிகளுக்கு எவ்வளவு சேமிப்பிடத்தை எடுத்துக்கொள்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப செயல்படலாம்.
இது தவிர பின்னணியில் இயங்கும் சில ஆப்கள் உங்கள் ஸ்டோரேஜை அதிகம் பயன்படுத்துகின்றன. ஒரு முறை செயிலையை பயன்படுத்திய பிறகு அதனை குளோஸ் செய்வது நமது போன் வேகமாக செயல்பட உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறை டெம்ப் ஃபைல்களை டெலிட் செய்யலாம்
செயலிகளை ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும்போதும் டேட்டாவானது டெம்ப் ஃபைல்களை போனில் சேமிக்கின்றன. இந்த டேட்டா நமக்கு அவசியமில்லை. அது போன் ஸ்டோரேஜை தேவையில்லாமல் காலி செய்யும். இதனை அழிக்க, போன் செட்டிங்கிற்கு சென்று ஸ்டோரேஜ் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும் அதில் Cached data என்ற ஆப்சன் இருப்பதை உங்களால் பார்க்க முடியும். உடனடியாக Clear cache என்பதைக் கிளிக் செய்து, clear all cache-ஐக் கிளிக் செய்யவும்.
புகைப்படங்களையும் வீடியோக்களையும் கூகுள் போட்டோஸில் சேமிக்கவும்
பொதுவாக போனில் கேலரி அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது. கூகிள் போட்டோஸ் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி அதில் புகைப்படங்கள்/வீடியோக்களை சேமிக்கலாம். பின்னர் அவற்றை போனில் இருந்து நீக்கலாம். இது ஸ்டோரேஜ் ஃப்ரீயாகும். நம் போட்டோக்கள், வீடியோக்களும் பாதுகாப்பாக இருக்கும்.
ஃபைல்ஸ் பை கூகுள் (Files by Google) என்ற செயலியைப் பயன்படுத்தி போனில் உள்ள மற்ற செயலிகளை பராமரிக்க முடியும் கூகுளின் இந்த செயலி தேவையற்ற டாக்குமெனன்ட்கள், ஸ்கீரன்ஷாட், போட்டோ போன்றவற்றை அகற்றுவதற்கு நமக்கு உதவுகிறது. இது ஸ்டோரேஜை மிச்சப்படுத்தும், மேலும் போனின் வேகத்தையும் அதிகரிக்கும். இந்த செயலியில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், எதை நீக்க வேண்டும், எதை நீக்கக்கூடாது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.