Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போனில் இந்த செட்டிங்ஸை மாற்றுங்கள் – யாராலும் திருட முடியாது! – எப்படி செய்வது?

Smartphone Anti-Theft Tips : இப்பொழுது ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. அதில் நமது முக்கியமான போட்டோக்கள், டாக்குமென்ட்கள் என அனைத்து டேட்டாக்களும் இருக்கின்றன. இந்த நிலையில் நமது போன் திருடப்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். ஸ்மார்ட்போனில் இரண்டு செட்டிங்ஸை மாற்றுவதன் மூலம் நமது போன் திருடப்படாமல் பாதுகாக்கலாம்.

போனில் இந்த செட்டிங்ஸை மாற்றுங்கள் – யாராலும் திருட முடியாது! – எப்படி செய்வது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Jul 2025 20:05 PM

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள்  (Smartphone) நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், அது நம் கையில் ஆறாவது விரலாக மாறிவிட்டது. ஒரு மணி நேரம் கூட போன் இல்லாமல் இருக்க முடியாத நிலையில் பலரும் இருக்கிறார்கள்.  மேலும் ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்கள், வங்கி விவரங்கள், சமூக ஊடக கணக்குகள் (Social Media), முக்கியமான டாக்குமென்ட்கள் உட்பட  தனிப்பட்ட டேட்டாக்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் தொலைபேசி திருடப்பட்டால் ஏற்படும் மிகப்பெரிய இழப்பை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில், நமது ஸ்மார்ட்போனில் சில முக்கியமான அமைப்புகளை முன்கூட்டியே மாற்றியமைப்பது முக்கியம். இதனால் நமது திருடப்பட்டாலும் அதை எளிதாகக் கண்காணிக்க முடியும். நமது டேட்டாவும் பாதுகாப்பாக இருக்கும். இப்போது அந்த இரண்டு அமைப்புகள் என்ன என்பதை விரிவாகக் கண்டுபிடிப்போம்.

ஸ்மார்ட்போனில் தெஃப்ட் லாக் அம்சத்தை எப்படி மாற்றுவது?

  1. முதலில், உங்கள் Settings செல்லுங்கள்.

  2. கீழே உருட்டி Google Services என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

  3. அங்கே  All Services என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

  4. இப்போது, Theft Protection என்ற விருப்பத்தை காணலாம்.

  5. அதை ஓபன் செய்த பின், Find My Device Lock என்ற அம்சத்தை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க: ஒரே நமிடத்தில் ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF-ஆக மாற்றலாம் – கூகுள் டிரைவின் இந்த வசதி பத்தி தெரியுமா?

போனை லாக் செய்யும் வசதி

இந்த அம்சத்தை இயக்கிய பிறகு, யாராவது உங்கள் மொபைலை திருட முயற்சித்தால், அது தானாகவே லாக் ஆகும்., உங்கள் அனுமதி இல்லாமல் திறக்க முடியாத நிலைக்குச் செல்வது.
இதனால், உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். மேலும், நீங்கள் உங்கள் மொபைலின் இருப்பிடத்தையும் கண்டுபிடிக்க முடியும்.

உங்கள் போனை திருடியவர் அதனை ஆஃப் செய்ய முயற்சிக்கும் போது, பாஸ்வேர்டு கேட்கும் வசதியும் இருக்கிறது. இதனால் உங்கள் போனை ஆஃப் செய்ய முடியாது. இதனால் உங்கள் போனை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

இதையும் படிக்க : மழை காலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி? ஈஸியான டிப்ஸ் இதோ!

அதை எப்படி அமைப்பது?

  1. மீண்டும் உங்கள் போனில் Settings பகுதிக்கு செல்லுங்கள்.

  2. மேல் பகுதியில் உள்ள சர்ச் பகுதியில் Power Off Lock அல்லது Require Password to Power Off என்று தேடுங்கள்.

  3. அதில் வரும் விருப்பத்தை ஆன் செய்யுங்கள்.

இது ஆன் செய்யப்பட்டால், உங்கள் போனை திருட முயற்சிப்பவர் பவர் ஆஃப் செய்ய முயற்சித்தால், உங்கள் லாக் ஸ்கிரீன் பாஸ்வேர்ட் கேட்கும். இது உங்கள் மொபைலை ஆன் நிலையிலேயே வைத்திருக்கும். இதனால் உங்கள் போன் எங்கிருக்கிறது என்பதை கண்காணிக்க உதவும்.