AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமானத்தில் மொபைல் போனை ஃபிளைட் மோடில் வைத்திருப்பது ஏன்?

Airplane Mode Explained : பொதுவாக விமான பயணங்களில் மொபைல் போனை ஃபிளைட் மோடில் வைத்திருக்க விமான அதிகாரிகள் வலியுறுத்துவார்கள். ஏன் என்ற காரணம் தெரியாமலேயே நாமும் மொபைல் போனை ஃபிளைட் மோடுக்கு மாற்றுவோம். இந்த கட்டுரையில் விமானத்தில் மொபைல் போனை ஃபிளைட் மோடுக்கு மாற்றுவதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

விமானத்தில் மொபைல் போனை ஃபிளைட் மோடில் வைத்திருப்பது ஏன்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Jun 2025 17:11 PM IST

பொதுவாக விமான பயணத்தின் போது  சரியா விமானம் (Flight) புறப்படுவதற்கு முன்பு, உங்கள் மொபைல் போனை ஃபிளைட் மோடில் (Flight Mode) வைத்திருக்க வேண்டும் என்று விமானக் குழுவினர் மீண்டும் மீண்டும அறிவிப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் மொபைல் போனை (Mobile Phone) ஏன் ஃபிளைட் மோடுக்கு மாற்ற வேண்டும் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை மொபைல் போனை ஃபிளைட் மோடுக்கு மாற்றவில்லை என்றால் அது விமானத்திற்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா? அல்லது அதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் விமானத்தில் மொபைல் போனை ஃபிளைட் மோடுக்கு மாற்ற சொல்வதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

நமது மொபைலில் ஃபிளைட் மோடை ஆன் செய்யும் போது உங்கள் தொலைபேசியின் வைஃபை, மொபைல் நெட்வொர்க் மற்றும் புளூடூத் போன்ற அனைத்து வயர்லெஸ் இணைப்புகளும் செயலிழக்கும். இதன் பொருள் உங்கள் தொலைபேசி எந்த வகையான சிக்னலையும் அனுப்புவதையோ அல்லது பெறுவதோ தடை படும்.

விமானத்தில் ஃபிளைட் மோட் ஏன் அவசியம்?

ஒரு விமான பயணத்தின் போது, ​​விமானி மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும் இடையே மிகத் துல்லியமான ரேடியோ சிக்னல்கள் மற்றும் தொடர்பு இருக்கும். நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கள் மொபைல்போன் நெட்வொர்க்குகளை ஆன் செய்திருந்தால், அது விமானத்தின் சிக்னல்கள் மற்றும் வானொலி அமைப்புகளில் செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.  இப்போதெல்லாம்  விமானங்களின் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் வலுவாக இருந்தாலும், எந்தவிதமான தொழில்நுட்பச் சிக்கல்களும் ஏற்படாதவாறு தவிர்ப்பது முக்கியம். மேலும் ஃபிளைட் மோடை ஆன் செய்வது, விமானத்தின் அமைப்புகளில் எந்த நெட்வொர்க் சிக்னலும் குறுக்கிடாமல் இருப்பதை உறுதி செய்யும்.

விமானம் 30,000 அடி உயரத்தில் இருக்கும்போது, ​​உங்கள் மொபைல் நெட்வொர்க் தானாகவே வேலை செய்வதை நிறுத்திவிடும். இதன் காரணமாக மொபைல் போன் தொடர்ந்து நெட்வொர்க்கைத் தேடுகிறது, இது பேட்டரியை விரைவாக காலி செய்வதோடு, விமானத்தின் நெட்வொர்க் அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய டிஜிசிஏ மற்றும் சர்வதேச விமான நிறுவன விதிகளின்படி, விமானத்தின் போது மொபைல் போனை ஃபிளைட் மோடில் வைத்திருப்பது கட்டாயமாகும். பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒருவேளை நாம் ஃபிளைட் மோடை ஆன் செய்யவில்லை என்றால்  தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கக்கூடும். விமானிக்கும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு தடைபடலாம். மேலும் உங்கள் போன் பேட்டரி வேகமாக தீர்ந்து போகக்கூடும். சில நாடுகளில், விதிகளை மீறுவது அபராதத்திற்கும் வழிவகுக்கும்.

வைஃபை பயன்படுத்தலாமா?

இப்போதெல்லாம், சில விமானங்களில் விமானத்திலேயே வைஃபை வசதி உள்ளது, எனவே ஃபிளைட் மோடை ஆன் செய்த பிறகும் வைஃபையுடன் இணைக்க முடியும். ஆனால் மொபைல் நெட்வொர்க்கை ஆஃப் செய்து வைத்திருப்பது இன்னும் அவசியம்.

Follow Us