ஆண்ட்ராய்டு மூலம் யூசர்களின் தகவல்களை திருடும் மெட்டா? அதிர்ச்சி தகவல்
Android Users at Risk :பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனமான மெட்டா, ஆண்ட்ராய்டு போன்களில் யூசர்களின் பிரவுசர் ஹிஸ்டரி போன்ற முக்கிய தகவல்களை சேகரிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தவறாக பயன்படுத்தப்படும் என்பதால் மக்கள் தங்கள் பிரைவசி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பிரைவசி பற்றிய கவலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் மெட்டா (Meta) மற்றும் யாண்டெக்ஸ் நிறுவனங்கள், ஆண்ட்ராய்டில் (Android) உள்ள ஒரு குறைபாட்டை (loophole) பயன்படுத்தி, பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை (browsing history) அனுமதி இல்லாமல் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக, ஆண்டிராய்டில் உள்ள பாதுகாப்பு அமைப்பு காரணமாக, ஒரே மொபைலில் உள்ள மற்ற செயலிகளில் (apps) தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாது. ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியில் வெளியான கட்டுரையின் படி, மெட்டா நிறுவனம் அந்த பாதுகாப்பை மீற ஒரு சிறிய வழியை பயன்படுத்தி, பயனர்களின் முக்கியமான இணைய பயன்பாடு தொடர்பான குக்கீஸ்களை (Cookies) அவர்களுக்கே தெரியாமல் சேகரித்துள்ளது.
இதன் மூலம், பயனர்கள் எந்த வலைத்தளங்களை பார்கிறார்கள் என்பதை மெட்டா (மெட்டா) போன்ற செயலிகள் தெரியாமல் அறிந்துகொண்டு சேமித்துள்ளன. குறிப்பாக, சில வலைத்தளங்களில் யூசர்கள் செல்வதைப் பார்த்து உங்கள் இணைய பயன்பாட்டை கண்காணித்துள்ளன என்று கூறப்படுகிறது. இது பிரவுசர்களில் கூடுதல் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் Incognito Mode-ஐயும் மீறி செயல்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் மற்றும் ஃபைர்பாக்ஸில்
இந்த விஷயம் வெளிவந்தவுடன், கூகுள் மற்றும் ஃபயர்பாக்ஸ் நிறுவனங்கள் இது தங்களது விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி விசாரணையைத் தொடங்கியுள்ளன. மேலும் கூகுள் பிளே ஸ்டோரின் செயல்பாடுகள் யூசர்களின் பிரைவசிக்கும் முரண்பாடுகள் இருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.




இந்த குறைபாடு மூலமாக, மெட்டா செயலிகள் தனிப்பட்ட பிரவுசிங் ஹிஸ்டரி டேட்டாக்களை சேகரித்து வந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முறையாக இது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த யான்டெக்ஸ் (Yandex) நிறுவனம் இதையே 8 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
மெட்டா ஆப்களின் நம்பக்தன்மை கேள்விக்குறியானது
இந்த மாதிரி செயலிகள் ஆண்ட்ராய்டு பயனர்களின் தகவல்களை திரட்டுவதைத் தடுக்க, மொபைல் பிளாட்ஃபாரங்களிலும், பிரவுசர்களிலும் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. மேலும் உலக அளவில் மக்கள் மெட்டா தளங்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்களின் பிரைவசி குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாம் இனி இணையதளங்களில் தேடும் தகவல்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
குறிப்பாக, மெட்டா மற்றும் யாண்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள், பயனர்களின் அனுமதியின்றி அவர்கள் பார்த்த வலைத்தள தகவல்களை சேகரித்திருக்கின்றன என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் மொபைலில் மெட்டா ஆப்களை பயன்படுத்தும் போது அது நமது குக்கீஸ்களை சேகரிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.