Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Smartphone : உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாக உள்ளதா?.. அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க!

Boost Smartphone Speed | ஸ்மார்ட்போன்கள் ஆரம்பத்தில் பயன்படுத்தும்போது வேகமாக இயங்குவது போல சில ஆண்டுகள் கழித்து அதே வேகத்துடன் இயங்காது. இதற்கு முக்கிய காரணம், ஸ்மார்ட்போனில் செயலிகள் மற்றும் அதன் ஸ்டோரேஜ் அதிக இடம் பிடிப்பது தான். இந்த நிலையில், இந்த சிக்கல்களை சரிசெய்து ஸ்மார்ட்போன்களை மீண்டும் புதியது போல் இயங்க வைப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Smartphone : உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்லோவாக உள்ளதா?.. அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 31 May 2025 23:01 PM

தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் (Smartphones) கட்டாய தேவையாக உள்ளது. ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். முன்னதாக பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை எல்லாம், தற்போது ஸ்மார்ட்போன்கள் மூலம் மிக எளிதாக செய்து முடித்துவிட முடியும். ஸ்மார்ட்போன்கள் மனிதர்களின் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போன் திடீரென செயல்படவில்லை என்றாலோ அதில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ கடும் சிக்கல்கள் ஏற்பட்டு விடும்.

ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை பாதிக்கும் ஸ்டோரேஜ்

ஸ்மார்ட்போன்களை புதியதாக வாங்கி பயன்படுத்தும்போது அதன் செயல்திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும். காரணம் புதிய ஸ்மார்ட்போனில் அதிக செயலிகள் இருக்காது. இதன் காரணமாக அதில் ஸ்டோரேஜ் இருக்கும். இவை அனைத்தும் அதன் செயல்திறனை சீராக வைத்திருக்க உதவும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஸ்மார்ட்போனை நாம் அதிகம் பயன்படுத்த தொடங்கி விடுவோம். அதிக செயலிகளை பயன்படுத்துவது, அதிக நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது ஆகியவை ஸ்டோரேஜ் மற்றும் டேட்டாக்களை சேகரித்து வைத்துக்கொள்ளும். இந்த சூழலில் ஸ்மார்ட்போனை பயன்படுத்து சற்று சவாலாக மாறிவிடும். இதுபோன்ற சூழலில், ஸ்மார்ட்போனின் தேவையற்ற ஸ்டோரேஜை கிளியர் செய்யும் பட்சத்தில் ஸ்மார்ட்போன் சீராக செயல்படும்.

ஸ்மார்ட்போனில் தேவையற்ற ஸ்டோரேஜ் மற்றும் டேட்டாக்களை கிளியர் செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போன் மெதுவாக இயங்குவது அல்லது அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற செயலிகள் மற்றும் ஃபைல்களை டெலிட் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பயன்படுத்தாத செயலிகளை கட்டுப்படுத்துவது

  1. முதலில் ஸ்மார்ட்போன் Settings-க்குள் செல்ல வேண்டும்.
  2. அதில் உள்ள Apps என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, App Store என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் உள்ள Offload Unused Apps என்ற ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி Offload Unused Apps ஆப்ஷனை ஆன் செய்வதன் மூலம் செயலிகள் தேவையற்ற இடங்களை பிடிப்பது நிறுத்தம் செய்யப்பட்டு ஸ்மார்ட்போன் சீராக பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.