UPI : இனி விமானத்திலும் யுபிஐ பேமெண்ட் செய்யலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!
NFC UPI Payment Method Will Introduce Soon | யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் பெரிய சிக்கலாக உள்ளது தான் நெட்வொர்க் சிக்கல். இந்த நிலையில், நெட்வொர்க் சிக்கல் இல்லாமல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு அசத்தல் அம்சம் அமலுக்கு வர உள்ளது.
இந்தியாவில் தற்போதைய சூழலில் பெரும்பாலான மக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனை முறையை தான் பயன்படுத்துகின்றனர். சிறிய மலிகைக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை சிறிய அளவிலான தொகை முதல் பெரிய அளவிலான தொகை வரை யுபிஐ மூலம் மக்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு பொதுமக்களால் பரவலாக யுபிஐ பண பரிவர்த்தனை பயன்படுத்தப்படும் நிலையில், பெரும்பாலான பயனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. அதுதான் நெட்வொர்க் சிக்கல். பண பரிவர்த்தனை செய்யும்போது நெட்வொர்க் சிக்கல் ஏற்பட்டால் பண பரிவத்தனை தோல்வியடைவது, பாதியிலேயே நின்றுவிடுவது உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இந்த நிலையில் தான், நெட்வொர்க் வசதி இல்லாமலே யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை என்பிசிஐ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன அம்சம் அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
NFC பயன்படுத்த விரைவில் அனுமதி வழங்க உள்ள என்பிசிஐ
அதாவது மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NCPI – National Payment Corporation Of India), முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் PoS டெர்மினல்களுக்கு விரைவில் ஒரு முக்கிய நிதி பரிமாற்ற ஒப்புதலை வழங்க உள்ளது. அதாவது, இந்த ஒப்புதல் மூலம், மொபைல் போனில் இருக்கும் NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.2,000 வரையிலான தொகையை பண பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது.




இதையும் படிங்க : இனி லட்சக்கணக்கில் பணம் செலுத்தி ஐபோன் வாங்க வேண்டாம்.. லீஸ் அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டம்!
பேமெண்ட் NFC மூலம் நடைபெறுவதன் காரணமாக, பண பரிவர்த்தனை செய்ய நெட்வொர்க் வசதி தேவையில்லை. ஆனால், இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பொதுமக்கள் தங்களது வேலெட்டில் பணத்தை போட வேண்டும். இது வரையில் கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொண்டு வந்தன.
இதையும் படிங்க : உலகின் மிக நீண்ட ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்த இந்தியா.. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது!
இந்த பேமெண்ட் முறையில் ரூ.2,000 அதிகபட்சமாக உள்ள நிலையில், நிதி மோசடிக்கான ஆபத்தும் இதில் குறைவாகவே இருக்கும். இந்த அம்சத்தின் மூலம் விமானத்தில் பயணம் செய்யும்போது கூட சுலபமாக பண பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.