கேஸ் சிலிண்டர் விபத்துக்களை தடுக்க அதிரடி நடவடிக்கை.. விரைவில் வருகிறது ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்.. சிறப்புகள் என்ன என்ன?
Smart LPG Gas Cylinders To Be Introduce Soon | தற்போதுள்ள கேஸ் சிலிண்டர்களில் இருந்து கேஸ் கசிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தான் விபத்துக்களை தடுக்க எச்பி அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து இடங்களிலும் கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வீடு, உணவகங்கள், விடுதிகள், திருமணம் மண்டபங்கள் என அனைத்து இடங்களிலும் சமையல் செய்ய கேஸ் சிலிண்டர்கள் தான் பிரதானமாக உள்ளது. விரகு அடுப்பை போல இல்லாமல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி மிக விரைவாக, சிரமமின்றி சமையல் செய்ய முடியும். ஆனால், சிறிதளவு கேஸ் கசிந்தாலும் பெரிய ஆபத்தில் சிக்க வைத்துவிடும்.
விரைவில் அறிமுமாக உள்ள ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்
இந்த நிலையில் தான், பாதுகாப்பாக முறையில் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர் (Smart LPG Cylinder) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர் என்றால் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர் என்றால் என்ன?
கேஸ் சிலிண்டர்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் ஆபத்துக்களை குறைக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனமாக எச்பி ஒரு முக்கிய முடிபை கையில் எடுத்துள்ளது. அதாவது கேஸ் கசிவை உடனுக்குடன் கண்டறிந்து, பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் எல்பிஜி சிலிண்டர்களை அறிமுகம் செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!
சிலிண்டர்கள் அதிக பாதுகாப்பை கொண்டு இருக்கும்
இது குறித்து கூறியுள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி துருவ் கபில், நவீன சிலிண்டர்கள் சாதாரண சிலிண்டர்களை விட அதிக பாதுகாப்பு கொண்டவையாக இருக்கும் என்று கூறியுள்ளார். சிலிண்டரில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் அதனை உடனடியாக கண்டறிந்து அந்த சாதனமே ஒலி எழுப்பும். இவ்வாறு சிலிண்டர் ஒலி எழுப்புவதன் மூலம் ஆபத்துக்களை முன்கூட்டியே தெரிந்து விபத்துக்களை தடுக்க முடியும்.
இதையும் படிங்க : சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவுக்கு பிளிப்கார்ட் அசத்தல் தள்ளுபடி.. எவ்வளவு தெரியுமா?
சிலிண்டர் வெடி விபத்துக்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், அவற்றை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.