AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மழை காலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி? ஈஸியான டிப்ஸ் இதோ!

Monsoon Mobile Safety Tips : மழைகாலங்களில் தான் ஸ்மார்ட்போன்கள் அதிகம் சேதமடைகின்றன. உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தாலோ அல்லது நனைந்தாலோ முதலில் போனை ஆஃப் செய்வது நல்லது. தண்ணீரில் விழுந்த பிறகும தொலைபேசி தொடர்ந்து இயக்கத்தில் இருந்தால், மேலும் சேதமடையும் அபாயம் உள்ளது.

மழை காலங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி? ஈஸியான டிப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jun 2025 22:55 PM IST

ஸ்மார்ட்போன்கள் (Smartphone) இன்று நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. ஸ்மார்ட்போன் நமது அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்கின்றன. ஒரு நாள் நம்மிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும் அந்த நாள் ஸ்தம்பித்து போய்விடும். ஏனெனில் அதனை சார்ந்தே நாம் வாழ்ந்து பழகிவிட்டோம். வேலை சார்ந்து ஸ்மார்ட்போன் மிகவும் அவசியம். இருப்பினும், இந்த மழைக்காலத்தில் (Rain) உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது மிகவும் முக்கியம். பெரும்பாலானோரின் ஸ்மார்ட்போன்கள் மழை காலத்தில் தான் சேதமடைகின்றன.  மழைக்காலத்தில் (Monsoon) செல்போன்கள் நனையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மழைக்காலத்தில் ஸ்மார்ட்போன்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

  • தண்ணீர் உள்ளே போகாமல் இருக்க நீர்ப்புகாத அளவுக்கு கவர்களைப் பயன்படுத்தலாம்.
  • உங்களிடம் நீர்ப்புகாத அளவுக்கு கவர்கள் இல்லையென்றால், அவசரகால சூழ்நிலைகளில் ஒரு ஜிப்லாக் பையைப் பயன்படுத்தலாம்.
  • முடிந்தவரை கனமழையில் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இதன் மூலம் மொபைல் போனுக்குள் தண்ணீர் செல்வதைத் தடுக்கலாம்.
  • உங்கள் தொலைபேசி தண்ணீரில் விழுந்தாலோ அல்லது நனைந்தாலோ, முதலில் செய்ய வேண்டியது உடனடியாக உங்கள் போனை ஆஃப் செய்ய வேண்டும்.  தண்ணீரில் மூழ்கிய பிறகும் தொலைபேசி ஆனாகி  இருந்தால், மேலும் சேதமடையும் அபாயம் உள்ளது.
  • தண்ணீரை வடிகட்ட தொலைபேசியை குறைந்தது ஆறு மணி நேரம் அரிசியில் ஊற வைக்கலாம்.
  • உங்கள் தொலைபேசியை தண்ணீரில் போட்டீர்கள் என்றால், அதை சார்ஜ் செய்யாமல் கவனமாக இருங்கள். உடனடியாக சிம் கார்டுகளை போனில் இருந்து அகற்றுங்கள்.
  • பேட்டரியை அகற்றக் கூடிய போனாக இருந்தால் உடனடியாக பேட்டரியை அகற்றலாம்.
  • தண்ணீரை வடிகட்ட ஸ்மார்ட்போனை அசைக்கவோ குலுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வதால், ஸ்மார்ட் போனின் உள்ளே உள்ள தண்ணீர் சென்று சேதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
  • ஸ்மார்ட் போன் பெரும்பாலும் தண்ணீரில் விழுந்தால் அதனை அகற்ற ஹேர் ட்ரையரை பயன்படுத்தப்படுகிறார்கள். இப்படிச் செய்வதால் போனுக்குள் அதிக தண்ணீர் நுழையும் ஆபத்து இருக்கிறது.
  • உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால், முதலில் அதை ஒரு துணியால் துடைக்கவும். உங்கள் ஸ்மார்ட்போனை சில நாட்களுக்குப் பயன்படுத்தாமல் விட்டுவிடுவதும் நல்லது.

மழைக்காலங்களில் நீங்கள் வெளியில் செல்லும் போது உங்கள் ஸ்மார்ட்போனை பராமரிக்க தனியான பவுச்சையும், கவரையும் வைத்திருக்கலாம். சில பிராண்டுகள் மழைக்காலங்களுக்கே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாட்டர் புரூஃப் பவுச்களை (Rainproof Pouches) தருகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் நனையாமல் பாதுகாக்கப்படும். ரெயின் கோட் அல்லது ஜாக்கெட் பயன்படுத்தும் போது, அதன் உள்ளே உள்ள ஜிப்பர் பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்திருப்பது பாதுகாப்பானது. அவசியமில்லாமல் போனை வெளியே எடுப்பதை தவிர்ப்பதன் மூலம் போன் சேதமடைவதை தவிர்க்கலாம்.

Follow Us