Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிஜிபின் என்றால் என்ன? போன் மூலம் டிஜிபின் எண்ணை எப்படி தெரிந்துகொள்வது?

Check Your DIGIPIN Easily : முகவரிகள் தெளிவாக இல்லாத கிராமப் பகுதிகள் புற நகர் பகுதிகளில் இருப்பிடத்தை துள்லியமாக தெரிந்து கொள்ள இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கட்டுரையில் மொபைலில் இருந்து டிஜிபின் எண்ணை எப்படி தெரிந்து கொள்வது என பார்க்கலாம்.

டிஜிபின் என்றால் என்ன? போன் மூலம் டிஜிபின் எண்ணை எப்படி தெரிந்துகொள்வது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Jun 2025 21:23 PM

இந்திய அரசு  டிஜிபின் (DIGIPIN)  என்ற பெயரில் புதிய டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிராம புறங்கள் முதல் நகரங்கள், கடல் பரப்புகள் வரை என அனைத்து இடங்களுக்கும் துல்லியமான முகவரியை உருவாக்க உதவும் வகையில்இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் தபால் (Post Office), கொரியர் நிறுவனங்கள் உங்களுக்கு வர வேண்டிய பார்சலை நேரடியாக உங்களிடம் அளிக்கும். மேலும், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனங்கள் உங்களுக்கு பொருட்களை கொண்டு வந்து சேர்க்கும். இதனையடுத்து முன்பு போல நீங்கள் லேண்ட்மார்க் சொல்லி கஷ்டப்பட தேவையில்லை. அதே போல போலீஸ், தீயணைப்பு, மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர மருத்துவ சேவைகளுக்கும் இது பெரிய பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.

டிஜிபின் என்னும் புதிய முகவரி முறைமையின் சிறப்பம்சங்கள்

இந்த டிஜிபின் எண் என்பது 10 இலக்க எண்கள், எழுத்துகள் கொண்ட ஒரு அமைப்பாகும். வீடு, அலுவலகம் என 4×4 மீட்டர் பரப்பளவில் உள்ள ஒவ்வொரு சொத்துக்கும் ஒரு டிஜிபின் உருவாக்க முடியும். இதனை இஸ்ரோ மற்றும் ஐஐடி ஹைதராபாத் ஆகியவை இணைந்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். டிஜிபின் தனிப்பட்ட தகவல்களை சேமிக்காது. இருப்பிட அடையாளத்தை மட்டுமே பெற முடியும்.  இது ஓபன் சோர்ஸாக இருந்தாலும் பிரைவசியை பாதுகாக்கும் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.

டிஜிபின் எண்ணை எப்படி பார்ப்பது?

 

போனில் இருந்து டிஜிபின் எண்ணை எப்படி பெறுவது?

  • போனில் இருந்து புரவுசரை திறந்து: https://dac.indiapost.gov.in/mydigipin/home  என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
  • அப்போது உங்கள் போனில் உள்ள லோகேஷன் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • பாப் பப் மூலம் Allow என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஒப்புதல் அளிக்கும் விதமாக I Consent என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • அப்போது ஸ்கீரினில் உங்கள் டிஜிபின் எண் காட்டப்படும்.

டிஜிபின் எண், இந்தியாவில் ஏற்கனவே உள்ள 6 இலக்க பின் கோடுகளை (PIN Code) மாற்றாக இருக்காது. ஆனால் கூடுதல் துல்லியமாக மற்றும் தெளிவான இருப்பிடத்தை தெரிந்துகொள்ள இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டிஜிபின் என்பது இந்திய முகவரி முறையில் ஒரு புதிய புரட்சியாக கருதப்படுகிறது. இது குறிப்பாக முகவரிகள் தெளிவாக இல்லாத ஊரக பகுதிகள், வனப்பகுதிகள், அல்லது புதிதாக வளரும் புற நகர் பகுதிகள் ஆகிய இடங்களில் மிகுந்த பயனளிக்கும். டிஜிபின் குறியீட்டை இன்று நீங்கள் சோதித்து பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.