Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Instagram : இன்ஸ்டாகிராமில் Quality ஆன ரீல்ஸ்களை பதிவேற்றம் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Upload High-Quality Instagram Reels | பொதுமக்கள் தங்களது அன்றாவ வாழ்வில் ரீல்ஸை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதில் அவர்கள் தரத்தில் சில சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் தரமான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Instagram : இன்ஸ்டாகிராமில் Quality ஆன ரீல்ஸ்களை பதிவேற்றம் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 May 2025 22:28 PM

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை போலவே இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியையும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் செயலி பொழுதுபோக்குக்கு மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. இந்த செயலி மூலம் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, உரையாடல், வீடியோ கால் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகிய இரண்டுக்கும் இது மிகவும் பயனுள்ள கருவியாக உள்ள நிலையில், பல கோடி மக்களின் முதன்மை தேர்வாக இது உள்ளது.

பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக பரவலாக பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம்

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அதிக பயன்படுத்துகின்றனர். இந்த செயலி தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமன்றி பொழுதுபோக்குக்கும் மிக சிறந்த செயலியாக உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி தகவல் பரிமாற்றம் செய்வதற்காக பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ இல்லை, இந்த செயலி பொழுதுபோக்கிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்ஸ்டாகிராம் செயலியை பொருத்தவரை பொழுதுபோக்கு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றனர்.

ஆனால், பெரும்பாலான மக்கள் விரும்பு  ரீல்ஸ் அம்சத்தை தான். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அம்சத்தை பயன்படுத்தி திரைப்பட பாடல்கள் அல்லது சொந்த குரல்களில் வீடியோ பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த அம்சத்தை நல்ல தரத்தில் வீடியோ பதிவேற்றம் செய்வது என தெரியாமல் உள்ளனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸை நல்ல தரத்துடன் பதிவேற்றம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நல்ல தரத்துடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பதிவேற்றம் செய்வது எப்படி?

பெரும்பாலான நபர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை எடிட் செய்துவிட்டு அதனை அப்படியே பதிவேற்றம் செய்கின்றனர். ஆனால், பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் ஒரு சிறிய மாற்றம் உங்கள் ரீல்ஸ் வீடியோவை மிகவும் தரமானதாக காட்சியளிக்க செய்யும்.

  1. முதலில் இன்ஸ்டாகிராம் செயலிக்குள் செல்ல வேண்டும்.
  2. அங்கு இடது பக்கத்தில் (போஸ்ட்) Post, ஸ்டோரி (Story), ரீல் (Reel), லைவ் (Live) உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.
  3. இந்த அம்சங்களுல் ரீல் என்ற அம்சத்தை தேர்வு செய்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து எடிட் செய்ய வேண்டும்.
  4. ரீல்ஸை எடிட் செய்த பிறகு, அந்த வீடியோவை பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக மோர் ஆப்ஷன்ஸ் (More Options) என்ற அம்சத்தை கிளிக் செய்து அதில் இருக்கும் Upload High Quality என்பதை கிளிக் செய்து வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையின் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதன் மூலம் மிகவும் தரமாக வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.