Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விமானத்தில் இதை செய்தால் அவ்வளவு தான்…பயணிகளே உஷார்…அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Flight Travel: விமான பயணத்தின்போது, சக பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக சத்தமாக பாடல் இசைக்கப்பட்டால் அது குற்றமாக கருதப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது. இது சட்ட சிக்கலை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.

விமானத்தில் இதை செய்தால் அவ்வளவு தான்…பயணிகளே உஷார்…அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
விமான பயணத்தின்போது இதை செய்தால் அவ்வளவு தான்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Feb 2026 09:48 AM IST

விமான பயணத்தின் போது ஹெட் போன் இன்றி அதிகளவு சத்தத்துடன் பாட்டு கேட்பது குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளி தர் மோஹோல் பதில் அளித்து பேசி இருந்தார். இதில், செல்போன் அல்லது ஹெட் போன் இல்லாமல் வேறு எந்த சாதனத்தையும் பயன்படுத்தி அதிக அளவு சத்தம் கேட்கும் வகையில் பாடல்களை இசைப்பது விமானத்தில் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருந்தால் அது தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு வழி வகுக்கும். கட்டுக்கடங்காத பயணிகளை கையாளுவதற்கான விதிகளை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இது ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டமாக இருந்தாலும், விமானத்தில் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் பாடல் இசைக்க பட்டால் அது சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க: ரயில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு…அம்ரித் பாரத் ரயில்களில் புதிய வசதி…ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!

விமான போக்குவரத்து விதிகள் கூறுவதென்ன

1937- ஆம் ஆண்டின் விமான விதிகளின் கீழ், டி ஜி சி ஏ சிவில் விமான போக்குவரத்து தேவைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் ஒரு விமானத்திற்குள் ஏற்படும் எந்த ஒரு சட்டவிரோதம் அல்லது இடையூறு விளைவிக்கும் நடத்தையையும் குற்றமாக கருதுகிறது. இதில்,

  • விதி 22: விமானத்தை எடுத்து செல்ல மறுப்பதையும், பயணிகளை விமானத்தில் இருந்து அகற்றுவதையும் கூட அனுமதிக்கிறது.
  • விதி 23: பாதுகாப்பு அல்லது நல்ல ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்படும் எவரையும் கட்டுப்படுத்த விமானியின் தலைமை விமானிக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • விதி 29: விமான விதிகளை யாராவது மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சத்தமாக பாடல் இசைப்பது உள்பட பாதுகாப்பை பாதிப்படைய செய்தாலும், மற்றவர்களை தொந்தரவு செய்தாலும் அபராதம் விதிக்கப்படும்.

விமான நிறுவனம் வழங்கும் பொழுதுபோக்கு…

விமானத்தில் பொழுதுபோக்கு அமைப்புகளை கொண்ட விமான நிறுவனங்கள், பயணிகள் விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் மென்மையான இசையை இசைப்பதாக விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் விளக்கியிருந்தார். விமான பயணத்தின் போது, பயணிகள் விமான நிறுவனத்தால் வழங்கப்படும்  பொழுதுபோக்கு உள்ளடக்கத்தையும் அணுகலாம்.

புதிய தண்டனை விதிகளை முன்மொழியவில்லை

எழுத்துப்பூர்வ அனுமதி பெற படாவிட்டால் டி ஜி சி ஏ உரிமம் பெற்ற விமான நிலையங்களிலும், விமானத்திலிருந்து புகைப்படம் எடுப்பதை கட்டுப்படுத்தும் விமான விதிகளின் விதி 13- ஐ அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஹெட்போன்கள் இல்லாமல் இசையை வாசிக்கும் பயணிகளுக்கு குறிப்பாக எந்த புதிய தண்டனை விதியையும் அரசு முன்மொழியவில்லை. இதற்கு பதிலாக அத்தகைய நடத்தை கட்டுக்கடங்காத பயணிகளுக்கான தற்போதைய கட்டமைப்பின் கீழ் கையாளப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 70-80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் இசை எழுப்பும் சாலை.. மும்பையில் முதல் முறையாக Melody Road!