கண்ணியம் இல்லாமல் வாழ முடியாது.. எயிட்ஸ் பாதிப்பு ரத்தம் உடலில் செலுத்தப்பட்டதால் இளம் பெண் விபரீதம்!
Man Injected HIV Infected Blood In Young Woman Body | தெலங்கானாவை சேர்ந்த 22வது இளம் பெண் ஒருவர் தனது தூரத்து உறவினர் ஒருவரை காதலித்துள்ளார். அவருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருந்ததால் காதலை முறித்த நிலையில், அந்த நபர் இளம் பெண்ணின் உடலில் எயிட்ஸ் பாதிப்பு ரத்தத்தை செலுத்தியுள்ளார்.
மல்கங்கிரி, ஏப்ரல் 13 : தெலங்கானாவில் (Telangana) தனது உடலில் தன் உறவினர் எயிட்ஸ் பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்திவிட்டதாகவும், இதன் காரணமாக கண்ணியம் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என கூறி 22 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக வீடியோ பதிவு செய்துள்ள அந்த இளம் பெண், தனது உறவினர் தன் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இளம் பெண் உடலில் எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய உறவினர்
தெலங்கானா மாநிலம், மெடச்சல் – மல்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த இளம் பெண். இவருக்கு தூரத்து உறவினராக மனோகர் என்பவர், தன்னை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் அவரது காதலை ஏற்றுக்கொள்ளாத அந்த இளம் பெண், பிறகு சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இருவரும் காதல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான், மார்ச் மாதம் இளம் பெண்ணின் உடலில் எச்ஐவி பாதிக்கப்பட்ட குற்றத்திற்காக மனோகர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : 1,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் சடலமாக மீட்கப்பட்ட கேரள சிறுமி.. சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காதலை முறித்த இளம் பெண்
முன்னதாக காவல்துறை விசாரணையில் இது குறித்து தெரிவித்த இளம் பெண், மனோகருக்கு எயிட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்த நிலையில், அவருடன் பேசுவதை தவிர்த்துவிட்டேன். ஆனால், அவர் என்னிடம் வந்து எந்த வித மருத்துவ உதவிகளும் இல்லாமல் நான் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன். என்னால், உனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறினார். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்தின் போது தனது காதல் உறவு குறித்தும், அதில் உள்ள சிக்கல் குறித்தும் இளம் பெண் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா.. பரபரப்புப் பின்னணி!
இதன் பிறகு இருவரும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் இளம் பெண்ணுக்கு பாதிப்பு இல்லை என்றும், அந்த இளைஞருக்கு பாதிப்பு உள்ளதாகவும் முடிவுகள் கூறியுள்ளன. தங்களது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் அவர்களது உறவை முறித்துக்கொள்ள கூறியுள்ளனர். இதற்கிடையே இளம் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது மாமா இறந்துவிட்ட நிலையில் திருமணம் தடைபட்டுள்ளது.
இந்த நிலையில், இளம் பெண்ணை பார்க்க வேண்டும் என்று கூறிய மனோகர் அவரது உடம்பில் எயிட்ஸ் பாதிப்பு ரத்தத்தை செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து இளம் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.